• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-03 17:07:28    
சோர்வாக மனம் குன்றி இருப்பது மன அழுத்தமல்ல

cri

உண்மையான மருத்துவ ரீதியான மனஅழுத்தம் என்பது மூளையில் உள்ள செரோடேனின் உற்பத்தி குறைவினால் உருவாவது. இதற்கு, மூளை அடிப்படையாக இயங்குவதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளிக்க வேண்டியுள்ளது.

ஆனால் நமது கவலையான சோர்வான உற்சாகம் குறைந்த நிலைகளெல்லாம் மூளை இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவை அல்ல. அவை வாழ்வோடு சமபந்தப்பட்டவை. சுகாதார நல அமைப்பில் அந்நோய்களுக்கு பல்வித சிகிச்சை முறைகளை கையாள வேண்டியுள்ளது. சாதாரண சிகிச்சை முறைகள், மாற்று மருத்துவம், மருந்து மாத்திரைகள் என்பன. மாத்திரைகளோடு வேறுபல ஆபத்துகளும் சேர்ந்து வரும் என்பது தான் எதார்தம்.

தன்னுடைய வாழ்க்கையில் மனஅழுத்தத்திற்கு மூன்று வகையான மருந்துகளை உட்கொண்டதில் எல்லாம் எடை அதிகரிப்பு, அதிக வேர்வை, மலச்சிக்கல், நடுக்கம், கோரபசி, நாவு வறண்டு போதல், சோர்வு நிலை மற்றும் சோர்வு கலந்த தூக்கமின்மை என ஒரேவித பக்க விளைவுகளையே தந்தது. இவைகளை விட்டு விட முயலும் போது மிக மோசமான பின் விளைவுகளையே அனுபவிக்க வேண்டியுள்ளது என பார்க்கர் விளக்கினார்.

சோர்வடைந்து உற்சாகம் குறைந்து தங்களை அணுகும் அனைவருக்கும் மருத்துவர்கள் மனஅழுத்தத்திற்கான மருந்துகளை மேம்போக்காக பரிந்துரை செய்தால் எதிர்காலத்தில் சுகாதார நலத்துறையினருக்கு அது பெரும் தலைவலியாக மாறிவிடும். குறிப்பாக எனக்கு மனஅழுத்தம் இருக்கிறது மருந்து கொடுங்கள் என்று கோரும் கோடிக்கனக்கான மக்களின் தேவையை நிறைவேற்ற விழி பிதுங்க வேண்டியிருக்கும்.

மேலோட்டமான மனஅழுத்த நிலைகளை மருத்துவ ரீதியில் தீர்க்கப்படவேண்டியதாக கருதாமல் ஆழமான மனபதட்ட அறிகுறிகளை கொண்டவர்களுக்கு மட்டுமே மருத்துவ ரீதியிலான சிகிச்சை அளிக்க வேண்டும். மேலோட்டமான மனஅழுத்த நிலைகளை கொண்ட இதர நோயாளர்களை ஆற்றுப்படுத்துதல், ஹிப்னோதெரப்பி எனப்படும் அறிதுயில் சிகிச்சை, மற்றும் உளவியல், சீன அக்குபஞ்சர், சீன மருத்துவம், தாய்சீ சிகிச்சை முறைகளில் தீர்வு காண்பது நல்லது.

கவலையில்லாத மனிதர்கள் இல்லை. வாழ்வில் ஏற்படும் சிறு தோல்விக்கு கூட சோர்வடைந்து மூலையில் உட்கார்ந்தால் எப்படி? எல்லா இரவுகளும் விடியும். புறப்படு தோழா!!! புது உலகம் நமது கையில்...


1 2 3