• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Sunday    Apr 6th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-03 17:07:28    
சோர்வாக மனம் குன்றி இருப்பது மன அழுத்தமல்ல

cri

பிரிட்டன் மருத்துவ இதழில் வெளியான இவ்வறிக்கை பார்க்கரின் அறிவியல்பூர்வ ஆய்வின் அடிப்படையில் உருவானது. 242 ஆசிரியர்கள் 15 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வுச் செய்யப்பட்டனர். அதில் 75 விழுக்காட்டினர், அக்கால மருத்துவ ரீதியில் மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகளாக மற்றும் செய்கைகளாக ஏற்கப்பட்டிருந்த அடையாளங்களையே கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் எவ்வித மருத்துவ சிகிச்சைகளையும் பெறவில்லை. ஆகவே கவலையான சோர்வான நிலையில் இருப்பது என்பது மனித வாழ்வின் இயற்கை தன்மை என்பதை பார்க்கர் கண்டறிந்தார். ஆனால் அவர் ஆய்வில் கண்ட அனைத்து வெளிப்பாடுகளும் செய்கைகளும் 30 வருடங்களுக்கு மேலாக மருத்துவ ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய மனஅழுத்தங்களாக எண்ணப்பட்டிருக்கிறது. சோர்வான, உற்சாகமில்லா நிலைகள் அனைத்தும் மருத்துவ ரீதியில் குணமாக்கப்படக்கூடிய நோய்கள் அல்ல என பார்க்கர் வாதிட்டார்.

தற்காலிகமாக கவலையோடு, சோர்வாக, உற்சாகமில்லாமல் இருந்து மருத்துவரை அணுகும் அனைவரும் மனஅழுத்தத்துடன் உள்ளதாக முடிவு செய்துவிடக்கூடாது என்பதே அவரின் முடிவாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் மனஅழுத்தம் என்பது சமூகத்தில் அதிகம் பேசப்படாத நோய் என்ற நிலையிலிருந்து கிட்டத்தட்ட எல்லோருமே சரளாமாக குறிப்பிடும் நாகரீக நோயாக மாறிவிட்டது. அசதியாக, சோர்வாக இருந்தாலோ மனஅழுத்தம் என்ற தப்பான எண்ணம் உருவாகி விட்டது.

இன்றைய விரைவான, அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமில்லாத பண்பாட்டு சூழல்களில் நமது நாடித்துடிப்பை, உடல் வெப்பத்தை, இரத்த அழுத்தத்தை கருவிகளின் உதவியுடன் நாமே பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது. சிறிய உடல் நலச் சிக்கல்களை சத்துணவுகள், புரதசத்துக்கள் அதிகமுள்ள பழங்கள், கிழங்குகள் மற்றும் உடல்பயிற்ச்சி மூலம் தீர்த்துக் கொள்கின்றோம். இதனை சுயமருத்துவ தீர்வு எனக் கொள்ளலாம். நமக்கு சில புத்தகங்கள் கூட இதற்கு உதவுகின்றன. ஒருபுறம் இவ்வாறிருக்க, மறுபுறம் எல்லாவற்றிற்கும் மருத்துவ சிகிச்சையை நாடுவோரும் இருக்கின்றனர்.

அமைதியற்ற வாழ்க்கை சூழலில் பலவித அழுத்தங்களை உணர்ந்தவர்கள் மற்றும் சோர்வுற்ற நிலையை சில வாரங்கள் அனுபவித்தவர்கள் மருத்துவரிடம் சென்று உடனடி தீர்வை கேட்கிறார்கள். இப்புதிய ஆய்வில் வெளியான சுயக்கண்டுபிடிப்பு மருத்துவ தீர்வுகளை கூறுகின்ற போது மக்கள் மன நிறைவோடு செல்கிறார்கள் என பார்க்கர் கூறுகிறார்.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040