• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-10 11:20:19    
அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பு

cri

அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய 2வது கருத்தரங்கு அண்மையில் சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான NAN NING நகரில் நிறைவடைந்தது. அனைத்து வட வளை குடா மற்றும் சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலம், அனைத்து வட வளை குடா ஒத்துழைப்பு முறைமை, தொழில் வளர்ச்சி மற்றும் நிதி ஆதரவு, அனைத்து வட வளை குடாவிலான போக்குவரத்து, துறைமுகம், சரக்குப் புழக்கம் மற்றும் சுற்றுலாத் துறைகளிலான ஒத்துழைப்பு முதலிய பிரச்சினைகள் பற்றி இக்கருத்தரங்கில் கலந்துகொண்டோர் ஆக்கப்பூர்வமாக விவாதித்தனர். அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பு, ஆயத்தக் கட்டத்திலிருந்து நடைமுறையாக்கக் கட்டத்திற்கு மாறியுள்ளது என்றும், எதிர்காலத்தில் பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வட வளை குடா, சீனா மற்றும் வியட்நாமின் தரைப்பிரதேசங்களும் சீனாவின் ஹைநான் தீவும் சூழ்ந்துள்ள, அரை பகுதி மூடப்பட்டிருக்கும் வளை குடா ஆகும். சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம், குவாங்துங், மற்றும் ஹைநான் மாநிலங்கள், வியட்நாமின் சில மாநிலங்கள் ஆகியவற்றைக் கொண்ட வட வளை குடா பொருளாதார மண்டலத்தை உருவாக்க, வட வளை குடாவின் வட பகுதியில் அமைந்துள்ள சீனக் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் 2002ஆம் ஆண்டில் திட்டமிட்டது. வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், புருனை ஆகியவற்றுக்கு விரிவாக்கும் யோசனையை குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் கடந்த ஆண்டில் முன்வைத்தது.

அனைத்து வட வளை குடா ஒத்துழைப்பு பற்றி பல முறை ஆராய்ச்சி செய்த சீனத் தேசிய மக்கள் பேரவைத் துணைத் தலைவர் JIANG ZHENG HUA எமது செய்தியாளரிடம் கூறியதாவது, அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பை ஆதரிப்பதாக வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், புருனை ஆகிய அனைத்து வட வளை குடா பிரதேசத்தைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

1 2 3