அத்துடன், தொடர்புடைய துறைகள் மற்றும் உகந்த திட்டப்பணிகளிலான ஒத்துழைப்பு பற்றி அவர்கள் ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர். பல ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் நடைமுறைப்படுத்தப்படத் துவங்கியுள்ளன. இதன் விளைவாக, சீன-ஆசியான் ஒத்துழைப்பில் புதிய உள்ளடக்கமாக அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பு திகழ்கின்றது. இத்தகைய பொருளாதார ஒத்துழைப்பை, சீன-ஆசியான் ஒத்துழைப்பில் முக்கியமானதொரு துறை என்ற முறையில் சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் உருவாக்கத்துக்கான ஒட்டுமொத்தத் திட்டத்தில் சேர்த்துள்ளோம். இதனை, சீனா-ஆசியான் 10+1 என்ற கட்டுக்கோப்பின் கீழுள்ள புதிய துணை மண்டல ஒத்துழைப்பாக மாற்றியுள்ளோம் என்றார் அவர்.
அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பில் சீன அரசு மிகவும் கவனம் செலுத்தி, அதனை, சீனத் தேசிய வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டத்தில் சேர்த்துள்ளது. இப்பொருளாதார ஒத்துழைப்பு பற்றி சீனத் தலைவர்கள் பல முக்கிய கட்டளையிட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்சிக் குழுச் செயலாளர் லியூ சிபௌ கூறியதாவது,
பன்னாட்டு நிபுணர்கள் குழுவை நிறுவ வேண்டும ஒத்துழைப்புக்கான நெடுநோக்குத் திட்டத்தை நிர்ணயிக்க வேண்டும். நிபுணர்கள் குழுவை நிறுவுவது என்பது அனைத்து வட வளை குடா ஒத்துழைப்பைத் துவக்குவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். இதற்கு ஆதரவளிப்பதாகத் தற்போது, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள், ஆசியான் செயலகம், ஆசிய வங்கி ஆகியவை தெளிவுபடுத்தியுள்ளன என்றார் அவர்.
அனைத்து வட வளை குடா ஒத்துழைப்பின் முக்கிய துறைகளில், போக்குவரத்து அடிப்படை வசதிகள், துறைமுகம், சரக்குப் புழக்கம், சுற்றுலாப் பயணம், கடல் மூல வளம், எரியாற்றல் ஆகியவை இடம்பெறுகின்றன. அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய கருத்தை முதன் முறையில் முன்வைத்த குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம், கடந்த ஓராண்டு காலத்தில் பல ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளது. வட வளை குடாவின் கடலோரப் பிரதேசத்தில் சில நவீன துறைமுகங்களை அது அமைத்துவருகின்றது. அத்துடன், இப்பிரதேசத்திலுள்ள நெடுஞ்சாலைகள், இருப்புப்பாதைகள் ஆகியவற்றையும் முழுமையாகச் சீரமைத்துவருகின்றது. இவற்றை ஆசியானுக்குத் திறந்துவிடப்படும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மையமாக மாற்றுவதே அதன் நோக்கம் ஆகும். தவிர, கடலோரத்தில் அமைந்துள்ள பல பெரிய ரகத் தொழிற்துறைத் திட்டப்பணிகளின் கட்டுமானம் துவங்கியுள்ளது அல்லது அவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளன.
மண்டலப் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய முன்னிபந்தனை நிதியாகும். இந்த ஒத்துழைப்பின் முக்கிய அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தும் பொருட்டு, எதிர்காலத்தில் அனைத்து வட வளை குடா பிரதேசத்திலான நிதி முதலீடு மற்றும் நிதித் திரட்டல் மேடையை உருவாக்க வேண்டும். நிதி ஆதரவை வலுப்படுத்தவும் வேண்டும் என்று இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட சீனத் தேசிய வளர்ச்சி வங்கித் தலைவர் சென்யுவான் கூறினார்.
1 2 3
|