• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-10 11:20:19    
அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பு

cri

சீன அரசின் வளர்ச்சித் தன்மை வாய்ந்த நிதி நிறுவனமான சீனத் தேசிய வளர்ச்சி வங்கி, வட வளை குடாவின் வளர்ச்சியை ஆதரிப்பதை எப்பொழுதும் அதன் முக்கிய பணியாகக் கருதிவருகின்றது. இவ்வாண்டின் ஜுன் திங்கள் இறுதிக்குள், குவாங்சியின் வட வளை குடா பொருளாதார மண்டலத்துக்கு 2480 கோடி ரன்மின்பி யுவானைக் கடனாக வழங்க இவ்வங்கி வாக்குறுதியளித்துள்ளது. தவிர, ஆசியானைச் சேர்ந்த பல்வேறு உறுப்பு நாடுகளுக்குப் பணிக் குழுக்களையும் அது அனுப்பியுள்ளது. அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பைத் தூண்டுவதும் பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களின் நாடு கடந்த வளர்ச்சியை ஆதரிப்பதும் அதன் நோக்கம் ஆகும். அனைத்து வட வளை குடா ஒத்துழைப்பின் வேகமான வளர்ச்சியை மேம்படுத்தவும், குவாங்சியின் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கு ஆதரவளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கவும் அடுத்த 2 ஆண்டுகளில், சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்துக்கு 40 கோடி அமெரிக்க டாலர் கடன் தொகையை ஆசிய வங்கி வழங்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் லாரன்ஸ் க்ரீன்வுட் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

நான்னிங்-குன்மிங் இருப்புப் பாதையின் கட்டுமானத்துக்கு நிதித்தொகையையும் நான்னிங்கிலிருந்து சீன-வியட்நாம் எல்லைப் பிரதேசத்துக்குச் செல்லும் உயர் வேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்துக்குக் கடன் தொகையையும் வழங்கியுள்ளோம். இவ்வெல்லைப் பிரதேசங்களின் போக்குவரத்துத் திறனைக் குறிப்பாக நாடு கடந்துசெல்லும் போக்குவரத்துத் திறனை ஆசிய வங்கி பெரிதும் உயர்த்தும். இதன் மூலம், அங்குள்ள பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படும் என்றார் அவர்.

நேயர்கள் இதுவரை, அனைத்து வட வளை குடா பொருளாதார ஒத்துழைப்பு பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1 2 3