காதலை கசிந்துருகி பாடி அதன் உன்னதத்தை போற்றுபவர்கள் 100 பேர் இருந்தால், காதல் தோல்வியை ஒப்பாரி பாட 100 இருக்கத்தான் செய்கிறார்கள். இதயத்தில் இடி, கண்களில் மழை என்றெல்லாம் நறுக்காக காதல் வலியை சொல்ல நம்மில் ஆட்கள் உண்டு. சரி, காதல் முறிந்து விட்டது. அதனால் என்ன இப்படியா அழுது புலம்பிக்கொண்டிருப்பது?
என்னய்யா? நக்கலா? காதலித்து வேதனையில் வாடுவோரை பார்த்தால் உமக்கு இளக்காரமா? என்று சிலர் கேட்கக்கூடும்.

காதலையோ, காதல் தோல்வியையோ நான் நக்கலடிக்கவுமில்லை, குறைவாக மதிப்பிடவுமில்லை. காதல் முறிவால், காதல் தோல்வியால் ஏற்படும் வலியை, துன்பத்தை மக்கள் கொஞ்சம் அதிகமாகவே மதிப்பிட்டு விடுகின்றனர் என்றுதான் கூற முயற்சிக்கிறேன். அதைக்கூட நானாக சொல்லவில்லை. அண்மையில் சோதனை சமூக உளவியல் என்ற இதழில் வெளியான ஒரு ஆய்வு சொல்வதையே உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தவுள்ளேன்.
அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் உளவியல்துறையில் துணை பேராசிரியராகவுள்ள எலி ஃபின்கெல் என்பவர் அன்மையில் காதல் முறிவு பற்றி நடத்திய ஆய்வுதான் அது.
எலி ஃபின்கெல்லும் அவரது சகாவான பால் ஈஸ்ட்விக் என்பவரும் இளம் காதலர்களிடையே. குறிப்பாக தங்களுக்குள் மிக நெருக்கமான அன்பு இருப்பதாக கூறிய காதலர்களிடையே இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
1 2 3
|