• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-10 17:14:19    
இதுக்கு போயி அலட்டிக்கலாமா...

cri

ஆய்வு என்னவென்றால், ஒருவேளை காதலில் தோல்வியுற்றால் உங்கள் மனநிலை எப்படியிருக்கும், அதை எப்படி தாங்கிக்கொள்வீர்கள் என்று கேட்டபோது இந்தக் காதலர்கள் கூறியதற்கும், உண்மையில் இப்படியான காதல் தோல்வி நிகழும்போது அவர்கள் அதை எப்படி உணர்கிறார்கள் என்பதற்குமிடையிலான ஒரு ஒப்பீட்டு ஆய்வாகும்.

காதலில் தோல்வி ஏற்பட்டால் நான் இப்படி இருப்பேன், இதுபோல் உணர்வேன் என்று ஒருவர் சொன்னதும், காதல் தோல்வி ஏற்பட்டபின் உண்மையில் அவர் உணர்வு என்ன என்பதும் எப்படி பொருந்துகின்றன என்று இந்த ஆய்வு கண்டறிய முயன்றது.

பொதுவாகவே மக்கள் தாங்கள் காதலில் தோல்வியுற்றால் மிகவும் மனமுடைந்து, நொந்து போய்விடுவோம், நிலை குலைந்துவிடுவோம் என்றெல்லாம் எண்ணத்தான் செய்கிறார்கள். ஆய்வு முடிவின் படி சொன்னால், கொஞ்சம் அதிகமாகவே எண்ணி விடுகிறார்கள், மதிப்பீடு செய்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் காதல் முறிவு ஏற்படும்போது நினைத்த அளவுக்கு நொறுங்கி போவதில்லை, தாங்கிக்கொள்கிறார்கள்.

குறைந்தது 2 மாதங்களாவது காதல் வயப்பட்டிருந்த கல்லூர் மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இரு வாரங்களுக்கு ஒரு முறை வினாத்தாள் தரப்பட்டு, காதல் முறிவு நிகழ்ந்தால் என்ன ஆகும் என்பதைபற்றிய அவர்களது கருத்து பதிவு செய்யப்பட்டது.

9 மாத காலத்தில். காதல் முறிவு ஏற்பட்ட 26 பேரிடம் சேகரிக்கப்பட்ட தரவுகள் ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. முதல் 6 மாத காலத்தில் காதல் முறிவு ஏற்பட்ட 10 பெண்கள், 16 ஆண்கள் இந்த முறிவு ஏற்பட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு காதல் முறிவு பற்றி கூறிய கருத்தும், உண்மையில் முறிவு ஏற்பட்ட 2, 4, 6, 8 வாரங்களில் அவர்களின் கருத்து என்ன என்பதும் அலசப்பட்டது. காதலில் மிகவும் ஊன்றியிருந்த, தீவிரமாயிருந்த மக்கள் மட்டும் தங்கள் முறிவுக்கு பின் மிகவும் கவலையடைந்து, மனமுடைந்து போயிருந்தனர். ஆனாலும், அவர்கள் முன்னதாக தாம் இப்படியெல்லாம் இருப்போம் என்று நினைத்ததை விட உண்மையில் முறிவு ஏற்பட்ட பிறகு அவர்கள் கொஞ்சம் திடமாகத்தான் இருந்தனர். எதிர்பார்த்ததைவிட காதல் வலி கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது அல்லது காதல் முறிவின் தாக்கம் கொஞம் குறைவாகத்தான் இருந்தது.

ஆக காதல் முறிவு என்பது வாழ்க்கையில் ஏற்படக்கூடியதுதான், அதை நாம் ஒரு அனுபவமாகக் கொண்டு வாழ்க்கையில் தொடர்ந்து நடைபோடவேண்டுமே ஒழிய, சோக நினைவில் மூழ்கிக்கிடந்து, யாருக்கும் பயனற்ற வாழ்க்கையை தழுவிக்கொள்ளக்கூடாது. காதல் தோல்விதானே, அதுவும் காலப்போக்கில் மறந்து போகும்,மறைந்து போகும். காதல் முறிவு ஏற்பட்டால் நாம் நமக்குள் கேட்டுக்கொள்ளவேண்டியது, "இதுக்கு போயி அலட்டிக்கலாமா?".


1 2 3