• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-17 11:17:10    
ஒத்துழைப்பை நாடும் சீனாவின் மேற்குப் பகுதி பிரதேசம்

cri

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பெய்ச்சிங் சர்வதேச அறிவியல்-தொழில் நுட்பப் பொருட்காட்சியானது, உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய உயரிய தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்கள் தத்தமது புதிய அறிவியல் தொழில் நுட்பச் சாதனையைக் காட்டும் மேடையாகும். இது மட்டுமல்ல, சீனாவின் மேற்கு பகுதி மாநிலங்களும் தன்னாட்சிப் பிரதேசங்களும் அவற்றின் தனிச்சிறப்பு வாய்ந்த தொழிலையும் மேம்பாட்டுடன் கூடிய மூல வளங்களையும் காண்பிப்பதற்கும் முதலீட்டை ஈர்ப்பதற்குமான மேடையாகவும் திகழ்கின்றது.

உலகின் 30க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிக் குழுக்களும் சுமார் 2000 உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களும் கடந்த மே திங்கள் பெய்ச்சிங்கில் நடைபெற்ற 10வது பெய்ச்சிங் சர்வதேச அறிவியல் தொழில் நுட்பப் பொருட்காட்சியில் கலந்துகொண்டன. சீனாவின் 20க்கும் அதிகமான மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்கள் இதில் பங்குகொண்டன. இவற்றில் சுமார் 50 விழுக்காட்டு நிறுவனங்கள், சீனாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவை. மேற்குப் பகுதி மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிக் குழுக்கள் வலிமை மிக்கவை. அவை அதிகமான புதிய அறிவியல் தொழில் நுட்பக் கனிகள், தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்கள், மேம்பாட்டுடன் கூடிய திட்டப்பணிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தன. தவிர, பல்வகை அறிமுக மற்றும் முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.

இப்பொருட்காட்சியில் கான்சு மாநிலத் தலைவர் XU SHUO SHENG தாமே கலந்துகொண்டு, தம் மாநிலத்தின் பொருளாதாரத் திட்டப்பணிகளை அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது, பெய்ச்சிங் மாநகரம் மற்றும் இதர சகோதர மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, சந்தை வளர்ச்சி நிலைமை ஆகியவற்றில் சீனாவின் உட்புற மாநிலமான கான்சு மாநிலம் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால், முதலீட்டை உட்புகுத்தும் இம்மேடையைப் பயன்படுத்தி, எமது கான்சு மாநிலம் பற்றி பிரச்சாரமும் அறிமுகமும் செய்ய கான்சு மாநிலக் கட்சி கமிட்டியும் மாநில அரசும் தீர்மானித்துள்ளன. மேலும் அதிகமான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் கான்சு மாநிலத்தை அறிந்துகொண்டு, இம்மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் கட்டுமானத்துக்காகவும் இணைந்து பாடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம் ஆகும் என்றார் அவர்.

1 2 3