வட மேற்கு சீனாவின் சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவில் மிகப் பெரிய பரப்பளவுடைய பிரதேசமாகும். சிறுபான்மை தேசிய இன மணம் கமழும் பிரதேசமும் ஆகும்.
இப்பொருட்காட்சியில் இடம்பெறும் சிங்ஜியாங் பகுதியில் சிங்ஜியாங் ZHONG HE நிறுவனம் 50 விழுக்காட்டை வகித்தது. இது சீனாவில் மிகப் பெரிய அலுமினியப் பதனீட்டுத் தொழில் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தயாரித்த உற்பத்திப் பொருட்கள் உள் நாட்டிலும் ஜப்பான், தைவான் கிழக்காசிய ஆகிய நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் நன்கு விற்பனையாகின்றன. விமானப் போக்குவரத்து துறை, விண் வெளிப் பயணம், தகவல் சாதனம் ஆகிய துறைகளில் அவை அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் அறிவியல் தொழில் நுட்ப மேலாண்மைப் பிரிவுத் துணைத் தலைவர் மாபின் எமது செய்தியாளரிடம் கூறியதாவது,
இவ்வாண்டு நாங்களும் 2 புதிய திட்டப்பணிகளைக் கொண்டுவந்துள்ளோம். தற்போது உள் நாட்டில் இத்திட்டப்பணிகள் பற்றி எவரும் ஆராயவில்லை. உற்பத்திப் பொருட்களின் தேசிய மயமாக்கத்தை நனவாக்குவதே எங்கள் பணியாகும் என்றார் அவர்.
புதிய மின்னணு மூலப் பொருள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பற்றிய ZHONG HE நிறுவனத்தின் பணி நிறைவடைந்துள்ளது. அடுத்து தொழில் மயமாக்கக் கட்டத்தில் நுழைவோம். பெய்ச்சிங் அறிவியல்-தொழில் நுட்பப் பொருட்காட்சி மூலம், முதலீட்டு மற்றும் ஒத்துழைப்புக்கான கூட்டாளியைக் கண்டறிந்து, தொழில் மயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று விரும்புகின்றோம் என்று மாபின் மேலும் கூறினார். 1 2 3
|