• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-17 11:17:10    
ஒத்துழைப்பை நாடும் சீனாவின் மேற்குப் பகுதி பிரதேசம்

cri

கான்சு மாநிலம் வட மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. உலகில் புகழ்பெற்ற பண்டைக்காலப் பட்டுப்பாதை இம்மாநிலம் முழுவதற்கும் ஊடாகச் செல்கின்றது. வட மேற்கு சீனாவின் பெரும் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், கான்சு மாநிலப் பொருளாதாரம் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் சீராகவும் வளர்ச்சியடைந்துவருகின்றது. வெளிநாட்டுத் திறப்புப் பணியையும் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தையும் தொழில் கட்டமைப்பின் சரிப்படுத்தலையும் வேகப்படுத்தும் வகையில், கான்சு மாநிலம் 2000ஆம் ஆண்டு முதல் இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளத் துவங்கியது. தற்போது பொருட்காட்சி மேடை மூலம், இம்மாநிலம் உலகின் சுமார் 130 நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புறவை நிறுவியுள்ளது.

இவ்வாண்டின் அறிவியல்-தொழில் நுட்பப் பொருட்காட்சியில் கான்சு மாநிலம் கொண்டுவந்த 200க்கும் அதிகமான அறிவியல் தொழில் நுட்பக் கனிகள் முக்கியமாக விண் வெளிப் பயணத் தொழில் நுட்பம், உயிரின ஆக்கப்பொருட்கள், வறட்சி மேலாண்மை, புல் வெளி இயற்கைச் சூழல், பாலைவனக் கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளுடன் தொடர்புடையவை. இவற்றில் பெரும்பாலானவை, உலகின் முன்னேறிய நிலையை எட்டியுள்ளன. இப்பொருட்காட்சியில், சுமார் 340 கோடி யுவான் மதிப்புள்ள 32 திட்டப்பணிகளுக்கான உடன்படிக்கைகளில் கான்சு மாநிலம் கையொப்பமிட்டுள்ளது. இத்திட்டப்பணிகளின் நடைமுறையாக்கம், கான்சு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வலிமையான இயக்கு ஆற்றலைத் தரும் என்பது உறுதி.

நடப்பு பெய்ச்சிங் அறிவியல் தொழில் நுட்பப் பொருட்காட்சியில் தென் மேற்கு சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் இடம்பெறும் பகுதி, ஆட்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஒன்றாகும். இத்தன்னாட்சிப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர் SONG XIAO TIAN எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது,

குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் வேகமாக வளர வேண்டுமானால், அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு இன்றியமையாதது. இந்த ஆதரவு பெறுவதற்கான மிக முக்கியமான மேடை, சீனாவின் தலைநகரைச் சேர்ந்த உயர் கல்வி நிலையங்களே என்று கருதுகின்றோம். பெய்ச்சிஙகில், அதிகமான பிரபல பல்கலைக்கழகங்கள் உள்ளன. அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் வல்லுநர்களும் திறமைசாலிகளும் உள்ளனர். இம்முறை நாங்கள் இங்கே வந்து மற்ற பிரிவு நண்பர்களுடன் இணைந்து உரையாடிப் பெற்றுள்ள அனுபவங்கள், குவாங்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார் அவர்.

1 2 3