• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-17 15:25:29    
வெள்ளி விழா காணும் இறுவட்டு

cri

1982 ஆகஸ்ட் திங்கள் ஜெர்மனியில் உள்ள ஹானோவரில் ஒரு இடத்தில் மாபெரும் கூட்டம். அன்று கூட்டம் கூட காரணம், அந்நாள் நம் ஊரில் உள்ளதை போல ஆடி தள்ளுபடி நாளோ, புதிய திரைப்பட வெளியீட்டு நாளோ, அல்லை. இருப்பினும் அன்று ஏன் அவ்வளவு கூட்டம்?

25 ஆண்டுகளுக்கு மேல் சாதனை நிகழ்த்தி இன்றும் நிலைக்கொண்டிருக்கும் இறுவட்டு வெளியிடப்பட்ட நாள் தான் அந்நாள். 1982 ஆகஸ்ட் 17 ஆம் நாள். உலகம் பல்லாயிரக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புக்களை கண்டுள்ளது. சில கண்டுபிடிப்புகள் வந்த வேகத்திலேயே பிரிதொரு கண்டுபிடிப்பால் பின்தள்ளப்பட்டுளன. சில கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தவர்களின் பெயரை இன்றுவரை அழியாமல் காத்து மக்கள் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவி வருகின்றன. 25 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள இறுவட்டுகள் நிச்சயமாக மனிதகுலத்தின் ஒரு சாதனையே. 2007 ஆகஸ்டு 17 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இறுவட்டு வெளியிடப்பட்ட வெள்ளிவிழா நாளாகும். வெள்ளிவிழா நாளையும் தாண்டி பரந்த அளவில் பயன்படுத்தப்படும் இறுவட்டுகள் பற்றி இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் பார்ப்போம்.

சமுதாய வாழ்வில் கிராமபோன் ஒலித்தட்டுகள் அதிமிகு சாதனையை செய்தது எனலாம். ஆனால் வடிவமைப்பில் சற்று பெரிதான கிராமபோன் ஒலித்தட்டுகள் ஒலிநாடாவின் வருகையால் பின்னுக்கு தள்ளப்பட்டன. குறைந்த விலையில் நிறைந்த பயனை தந்த ஒலிநாடா துல்லியமான ஒலிப்பதிவில் அனைவருக்கும் மனநிறைவு அளிக்கவில்லை என்றே சொல்லலாம். இறுவட்டின் வருகை ஒலிநாடாவின் சந்தையை பின்னுக்கு தள்ளியது. உள்ளங்கையளவில் உள்ள இறுவட்டின் துல்லியமும், அதன் மலிவான விலையும் உலகிலுள்ள அனைவரையும் கவர்ந்து விட்டது எனலாம்.

1 2 3