• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-17 15:25:29    
வெள்ளி விழா காணும் இறுவட்டு

cri

இறுவட்டு வடிவமைப்பு கிராமபோன் தட்டுகளின் அடிப்படையை உள்வாங்கி உருவானது என்று கூறலாம்;. கிராமபோன் தட்டுகளில் வளையங்களுக்குள்ளே நிலத்தை உழுததைபோல காணப்படும் கோடுகளைபோல இறுவட்டுகளிலும் மிக நுண்ணிய பள்ளங்களும் மேடுகளும் காணப்படுகின்றன. இவை ஊடொளி கதிர்களால் வருடி படிக்கப்படுகின்றன. இந்த ஊடொளி கதிர் கிரமபோன் தட்டுகளை இயக்கும் கருவிகளில் காணப்படும் ஊசிக்கு ஒப்பாகும். இந்த ஒளியானது மில்லியன்கள் கணக்கிலான பூஜ்ஜியம் மற்றும் ஒன்று என்ற இரு எண்களாக பதிவு செய்யப்படுகிறது. இறுவட்டில் காணப்படும் பள்ளங்கள் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழியால் நிரப்பப்படுவதால் இந்த ஊடொளி கதிர்களால் பாதிக்கப்படுவதில்லை. மட்டுமல்ல அவை ஒலியின் தரத்தை எப்போதும் இழப்பதுமில்லை.

1986 ஆம் ஆண்டில் இறுவட்டு இயக்கிகள், கிராமபோன் கருவிகளை விட அதிகமாக விற்பனையாகி பிரமாண்டமான வெற்றி பெற்றன. 1988 ஆண்டுக்குள் கிராமபோன் தட்டுகளை விட இறுவட்டு விற்பனையில் வரலாற்றுப் பதிவுகளை எல்லாம் கடந்து சாதனை அடைந்தது. "விற்பனை சந்தையின் மிக பெரிய மாற்றமாக அது இருந்தது" என கவர்ஸ் தெரிவித்தார். ஆனால் இப்போது இறுவட்டுகள் அதனுடைய முடிவு நாட்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனலாம்.

MP3 மற்றும் மாணவ மாணவியர் தங்கள் சட்டைப்பையில் கொண்டுச் செல்லும் சிறு மின்னணுச் சாதனங்கள் இன்று இறுவட்டுகளின் இடத்தை பிடித்து விட முடியும்" என கூறும் ஓய்வு பெற்றுள்ள பொறியியலாலர் கிரேமர் "இறுவட்டுகள் அதிக நாட்கள் முதலிடத்தில் சாதனை பெற்றதை காண்பதும், அதன் படைப்பாக்கத்தில் சிறு பங்களிப்பை செய்ததும் மனநிறைவு தருகிறது" என்றும் தெரிவிக்கிறார். "ஒரு பொருளின் தரம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இறுவட்டுகள் அதிக நாட்கள் நீடித்து நல்ல தரத்தோடு இன்றும் உள்ளது" என்றார் அவர்.

கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் ஒன்றான இறுவட்டு இன்றும் பரவலான பயன்பாட்டில் உள்ளது என நாம் அறிவோம். கிராமபோனை விட துல்லிய ஒலியை தரும் இறுவட்டுகளின் இடத்தை எப்பொருள் பிடிக்க போகிறதோ. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


1 2 3