• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-17 15:25:29    
வெள்ளி விழா காணும் இறுவட்டு

cri

"ஸ்டாருஸ் அல்பைன் சிம்பொனியை பதிவு செய்திருந்த முதல் இறுவட்டை இன்று கேட்டாலும் அன்றைய நாளின் தரமான ஒலியுடன் கேட்க முடிகிறது" என ஹாலந்து ராயல் பிலிப்ஸ் எலெக்ரானிக்ஸ் நிறுவனம் இறுவட்டின் துல்லியமான பதிவை பற்றி குறிப்பிடும் போது தெரிவிக்கிறது. ஓலி நாடாவை விட அதிக நாட்கள், அதே தரத்துடன் இருக்கும் நிலையை இறுவட்டுகள் பெற்றிருக்கின்றன என்றால் மிகையாகாது.

இறுவட்டு எனச் சொல்லிவிட்டால் அதோடு மட்டும் நிறுத்திவிட முடியுமா? இறுவட்டை தனியாக எடுத்து சென்று என்ன செய்துவிட முடியும்? அதை இயக்க கருவி வேண்டாமா? இறுவட்டு அறிமுகமான நேரத்திலேயே இறுவட்டு இயக்கிகளும் அறிமுகமாயின. இறுவட்டு தொழில்நுட்பம் ஹாலந்து ராயல் பிலிப்ஸ் எலெக்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் ஜப்பான் சோனி நிறுனம் இணைந்து உருவாக்கியதாகும்.

"எண்ணியல் ஒலியலையை மக்களுக்கு கொண்டுவந்த இத்திட்டம் சவால் நிறைந்த ஒரு தொழிற்நுட்ப முயற்சியாகும்" என 1970 –களில் நெதர்லாந்து பிலிப்ஸ் ஆய்வுக்கூடத்தில் ஒளியியல் சார்ந்த ஆய்வுக்குழுவின் தலைவர் பெய்ற்றர் கிரேமர் கூறினார். "நாங்கள் தொடங்கிய போது இவ்விடத்தில் எதுவும் இருக்கவில்லை" என ஐந்தேவனிலுள்ள பிலிப்ஸ் நிறுவன குழுமத்தின் அருங்காட்சியகத்தில் அவர் கூறினார்.

இறுவட்டை இயக்குகின்ற குறைகடத்தி சில்லுகள் இதுவரை நுகர்வுப்பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளவற்றில் அதிக தரமிக்கவைகளாகும். இந்நிறுவனங்கள் 1979 ஆம் ஆண்டு இறுவட்டுகளை தயாராக்கிய போது ஊடொளி என்பது வரைவு நிலையில் தான் இருந்தது. 1980 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு புத்தகத்தில் இறுவட்டுகளின் தரம,; பிலிப்ஸ் மற்றும் சோனி நிறுவனங்கள் கொண்டிருந்த காப்புரிமைகள் பற்றிய தகவல்கள் வெளியாயின. இந்த புத்தகம் பின்னாளில் "சிவப்பு புத்தகம்" என்று அழைக்கப்படலாயிற்று. பிலிப்ஸ் நிறுவனம் ஊடொளி முறையில் இறுவட்டு தொகுப்பை மேம்படுத்த சோனி நிறுவனம் எண்ணியல் குறியீட்டாக்கத்தை வழங்கி இறுவட்டுகளின் சுமூகமான இயக்கத்திற்கு வழிவகுத்தது. சிவப்பு புத்தகம் மற்றும் அதற்கு பின்னர் வந்த குறிப்பாக இறுவட்டு படிப்பு நினைவகத்திற்கு பிலிப்ஸ் நிறுவனம் அனுமதி வழங்கி வருகிறது. ஜெர்மெனியில் நடந்த அதிக அளவிலான இறுவட்டுகள் தயாரிப்பு, இறுவட்டு வளர்ச்சியில்; மிக முக்கிய பங்கு வகித்தது எனலாம். இறுவட்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு பிலிப்ஸ் நிறுவனமும்; சோனி நிறுவனமும் இறுவட்டுகள் விற்பனைக்கு தயார் என அறிவித்தன. அவ்வண்ணமே இறுவட்டு இயக்கிகளையும் விற்க தெடங்கின. இவ்விரு நிறுவனங்களும் அவ்வாண்டு இலையுதிர் காலத்தில் இறுவட்டு இயக்கிகளை விற்பனை செய்ய தொடங்கினாலும் அவை அமெரிக்க சந்தையில் சில மாதங்கள் கழித்தே விற்பனைக்கு கிடைத்தன. சோனி நிறுவனம் தனது முதல் இறுவட்டு இயக்கியை அக்டோபர் முதல் நாள் ஜப்பானில் விற்பனை செய்தது.

1 2 3