கடந்த ஆண்டின் பிற்பாதியில் இருந்த புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடும் போது, இவ்வாண்டின் முற்பாதியில், சீன மகளிரின் ஊதியம் குறிப்பிடத் தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவில் ஆண்களின் சராசரி ஆண்டு ஊதியத் தொகை, 44027 யுவானாகும். இது, கடந்த ஆண்டின் பிற்பாதியில் இருந்ததை விட 3.09 விழுக்காடு அதிகமாகும். இவ்வாண்டின் முற்பாதியில், பெண்களின் சராசரி ஆண்டு ஊதியத் தொகை, 28766 யுவானாகும். இது, கடந்த ஆண்டின் பிற்பாதியில் இருந்ததைக் காட்டிலும் 10.16 விழுக்காடு அதிகரித்தது.

ஆண்களை விட பெண்களின் ஊதிய அதிகரிப்பு அளவு, 7.07 விழுக்காடு கூடுதலாகும்.
முனைவோர் பட்டம் பெற்றவரை விட, MBA பட்டதாரிகள் அதாவது தொழில் மற்றும் வணிக மேலாண்மையியல் முதுகலைப் பட்டம் பெற்றவரின் ஊதியம் சற்று அதிகம். இதைத் தவிர, பொதுவாகக் கூறின், கல்வித் தகுதி உயர்வுக்கு ஏற்றபடி, ஊதியமும் உயரும்.
இவ்வாண்டு முற்பாதியின் புள்ளி விபரங்களுக்கிணங்க, MBA பட்டதாரிகளின் சராசரி ஆண்டு ஊதியத் தொகை, ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 909 யுவான்.
1 2 3
|