விலைமதிப்புமிக்க தொப்பி
பிரிட்டனின் லண்டன் நகரில், கிறிஸ்தி ஏல விற்பனை அங்காடியில் , உலகில் விலைமதிப்புமிக்க தொப்பி ஒன்று அண்மையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் விலை, 15 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டு.

விலைமதிப்புமிக்க காலணி
வாய்ட்ஸ்மன் என்ற பிரபல ரத்தினக் கல் வியாபாரி தயாரித்த உயர் குதி காலணியில் 642 சிவப்பு மணிக்கற்கள் பொருத்தப்பட்டன. அதன் விலை,16 லட்சம் யூரோ.
பற்களால் தொடர் வண்டியை இழுத்துச்செல்வதில்
கின்னஸ் சாதனை
மலேசியாவைச் சேர்ந்த 'பல் மன்னன்' ராதாகிருஷ்ணன், ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று, கோலாலம்பூரில் தனது பற்களால் 297.1 டன் எடையுள்ள தொடர் வண்டி ஒன்றை, 2.8 மீட்டர் தொலைவு வரை இழுத்துச் சென்று, கின்னஸ் உலக சாதனையை முறியடித்தார்.
2003 ஆம் ஆண்டு, அவர் பற்களால் 260.8 எடையுள்ள தொடர் வண்டியை இழுத்துச் செல்வதில் வெற்றி கண்டமை அறியத் தக்கது. தான் முன்னர் நிலைநாட்டிய இக்கின்னஸ் சாதனையை அவரே புதுப்பித்தார். 1 2 3
|