2006ஆம் ஆண்டு ஜூலை முதல் நாளன்று உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள மிக நீளமான பீடபூமி இருப்புப்பாதையான சிங்காய்-திபெத் இருப்புப்பாதை முழுவதும் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாக, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் இருப்புப்பாதை ஏதுமில்லை என்ற வரலாறு நீங்கியது. கடந்த ஓராண்டில், புதிய காலத்தைத் துவக்கிவைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து பாதையாக விளங்கும் சிங்காய்-திபெத் இருப்புப்பாதை, திபெத் பொருளாதார வளர்ச்சியைப் பெரிதும் மேம்படுத்தியுள்ளது. உறைபனிப் பீடபூமிக்கு இது புத்துயிரை ஊட்டியுள்ளது.
நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, திபெத் பாடகர் பாசான் பாடிய வான் பாதை என்னும் பாடலாகும். சிங்ஹை-திபெத் இருப்புப்பாதையைப் பாராட்டுவதற்காகத் திபெத் மக்கள் இப்பாடலை இயற்றியுள்ளனர். இது ஒரு அற்புதமான தேவலோகப் பாதை. தாய்நாட்டின் அன்பை அது எல்லைப் பிரதேசத்திற்கு வாரி வழங்குகிறது. இனிமேல், மலை உயரமில்லை. பாதை நீளமில்லை. பல்வேறு தேசிய இன மக்கள் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடியுள்ளனர் என்று இப்பாடல் பாடுகிறது.
1 2 3
|