• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-24 14:31:09    
சிங்காய்-திபெத் இருப்புப்பாதையும் திபெத் பொருளாதார வளர்ச்சியும்-தொதி 1

cri

கடந்த ஓராண்டாக, சிங்காய்-திபெத் இருப்புப்பாதை இயங்கிவரும் நிலைமை, இப்பாடலைப் போல் உள்ளது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் துணைத் தலைவர் NIMACIREN கூறினார். அவர் கூறியதாவது,

கடந்த ஓராண்டாக, இந்த இருப்புப்பாதை மிகவும் சீராக இயங்கிவருகிறது. திபெத்தில் இருப்புப்பாதை இல்லாத வரலாறு முடிவுக்கு வந்துள்ளதைக் கண்டு தாய்நாட்டுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். திபெத்தின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமையை மாற்றுவதற்கு இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. எடுத்துக்காட்டாக, இங்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குளிர்க்காலத்தில் தொடர்வண்டி பயணியர்கள் குறைவாக இருப்பர் என்று நான் கவலைப்பட்டிருந்தேன். ஆனால், இத்தகைய கவலை தேவையில்லை என்பதைக் கடந்த சுமார் ஓராண்டு கால நடைமுறைகள் நிரூபித்துள்ளன. குளிர் காலத்திலும் பயணியர்கள் அதிகமாக உள்ளனர் என்றார் அவர்.

சிங்காய்-திபெத் இருப்புப்பாதை கட்டியமைக்கப்பட்டுப் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டதால், திபெத் விவசாயிகளுக்கும் ஆயர்களுக்கும் இன்பம் தரும் பாலமொன்று உருவாகியுள்ளது. தற்போது கடைகளும் உணவு விடுதிகளும் மழைக்குப் பிந்திய காளான் போல பல்வேறு தொடர்வண்டி நிலையங்களின் அருகில் தோன்றியுள்ளன. பலர் அங்கு பணி புரிந்து முன்பை விட கூடுதலான வருமானம் பெறுகின்றனர்.

திபெத் உழைப்பு ஆற்றல் சந்தைக்கு வாய்ப்பினை வழங்கும் அதே வேளை, இப்பிரதேசத்தின் பொருள் புழக்கம் மற்றும் போக்குவரத்து வளர்ச்சியையும் இந்த இருப்புப்பாதை கொண்டு வந்துள்ளது.

1 2 3