இவ்வாண்டின் ஜூலை திங்களில் கடல் மட்டத்திலிருந்து 5100 மீட்டர் உயரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 5100 திபெத் பனிக்கட்டி தாது நீர் இப்பாதை மூலம் சீனாவின் இதர பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளது. இருப்புப்பாதை, இத்தகைய நீர் உற்பத்திக்கான திட்டப்பணியைத் துவக்குவதற்கு முக்கிய காரணியாகும் என்று இந்நீர் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை மேலாளர் சியாங்சியௌஹொன் அம்மையார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
எமது இத்தொழிற்சாலை கட்டியமைக்கப்படுவதற்கு முன்னரே சிங்காய்-திபெத் இருப்புப்பாதையின் கட்டுமானப் பணி துவங்கியது. இருப்புப்பாதையின் கட்டுமானம் பற்றிய தகவலை அறிந்துகொண்டதும், இந்த தாது நீர் ஆலையைக் கட்டியமைக்கத் துவங்கினோம். எங்களுடைய தீர்மானம் மிகவும் சரியானது என்பதை இந்த இருப்புப்பாதை இயங்கத் துவங்கிய கடந்த ஓராண்டு கால நடைமுறைகள் நிரூபித்துள்ளன என்றார் அவர்.
போக்குவரத்து வசதி குறைவு அல்லது வசதியின்மை ஆகியவற்றின் காரணமாக, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது சிங்காய்-திபெத் இருப்புப்பாதை இயங்கத் துவங்கியதால், நெடுஞ்சாலை மற்றும் விமானப் போக்குவரத்துச் சுமை பெரிதும் தணிவடைந்துள்ளது. திபெத்திற்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து செலவு குறைக்கப்பட்டுள்ளதோடு, திபெத்தின் போட்டியாற்றலும் வலுப்பட்டுள்ளது. 1 2 3
|