• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-27 13:10:42    
சீனப் பெருநிலப் பகுதியில், மிக உயரமான கட்டிடம்

cri

சீனப் பெருநிலப் பகுதியில் மிக உயரமான கட்டிடத்தின் 101வது அடுக்கு மாடியின் கட்டுமானப் பணி, செப்டம்பர் 14ஆம் நாள் நிறைவடைந்துள்ளது. 492 மீட்டர் உயரமுடைய இவ்வானளாவிக்கு, சாங்காய் உலக நாணய மையம் என்று பெயர்.

101 அடுக்கு மாடிகளுடன் கூடிய இவ்வானளாவி, சீனப் பெருநிலப் பகுதியிலான மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சீன தைவான் மாநிலத்துத் தைபெய் நகரிலுள்ள 101 கட்டிடத்தின் உயரம் 508 மீட்டர் என்பது அறியத் தக்கது.

ஐக்கிய அரபு அமிரகத்தின் துபாய் நகரில், உலகின் மிக உயரமான கட்டிடம் கட்டியமைக்கப்பட்டு வருகின்றது என்று முந்தைய மலர்ச்சோலை நிகழ்ச்சியில் கூறினோம் அல்லவா?

உடல் பருமன் ஆடவரைக் காப்பாற்றிய

தீயணைப்பு வண்டி

அமெரிக்காவின் MICHIGAN மாநிலத்தைச் சேர்ந்த தீயணைப்புக் குழு பணியாளர்கள், செப்டம்பர் 18ஆம் நாள் தீயணைப்பு வண்டியைச் சேர்ந்த ஏற்றியிறக்கியைப் பயன்படுத்தி,408 கிலோகிராம் எடையுடைய ஆடவர் ஒருவரைப் படுக்கை அறையிலிருந்து காப்பாற்றினர்.

33 வயதான இந்த ஆடவர், அளவுக்கு மீறிய உடல் பருமனால், 2003 ஆம் ஆண்டு முதல், ஒருபோதும் வீட்டுக்கு வெளியே சென்றதில்லை. மருத்துவச் செவிலியர் ஒருவர் 18ஆம் நாளன்று அவரது வீட்டுக்குச் சென்று, நோய் நிர்ணயம் செய்த போது, "அவரது உடல் நிலை, கவலைக்குரியது" என்று தெரிவித்தார்.

உடனே இச்செவிலியர், தொலைபேசி மூலம் மீட்புதவியாளருடன் தொடர்பு கொண்டார். அளவுக்கு மீறிய உடல் பருமனால் அவ்வாடவரால் வெளியே வர இயலவில்லை. தீயணைப்புக் குழு பணியாளர்கள் சுவரை உடைத்துத் தான், ஏற்றி இறக்கி மூலம் அவரைப் படுக்கையிலிருந்து தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.

1 2 3