
அதிக நேரம் பயணம் செய்தால்,
ரத்தக் கட்டு ஏற்படும்.
நாள்தோறும் 4 மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்வோருக்கு, ரத்தக் கட்டு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று புதிய மருத்துவ ஆய்வு எச்சரிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் ஆதரவில் நடந்த ஆய்வில் இந்தத் தகவல் கிடைத்திருக்கிறது.
விமானம், தொடர் வண்டி, பேருந்து, மகிழுந்து என்று எந்த வகை வாகனமாக இருந்தாலும், நாளும் 4 மணி நேரத்துக்கும் மேல், அதிலேயே உட்கார்ந்த படி பயணம் செய்தால் இந்த ஆபத்து ஏற்படும்.
கை, கால்களை அசைக்க முடியாமல் இருக்கையிலேயே உட்கார்ந்து நீண்ட நேரம் பயணம் செய்வோருக்கு உடலில் ரத்த ஓட்ட வேகம் குறைகிறது. முதல் கட்டமாக, அவர்களுக்கு காலில் ரத்தம் கட்டிக்கொள்கிறது. சில நாட்களுக்கு, வாரங்களுக்கு அல்லது திங்களுக்குப் பிறகு, அந்த ரத்தக் கட்டு, ரத்தக்குழாய் வழியாகவே, உடலின் மேல் பகுதிக்குச் சென்று, நுரையீரலை அடைகிறது. அங்கு ரத்த ஓட்டத்தை அடைத்து, சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த வகையில் அது உயிருக்கு ஆபத்தை விளைக்கிறது.
இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், பயணத்தின் போது உட்கார்ந்து கொண்டே இருக்காம்ல உள்ளேயே அவ்வப்போது நடந்து செல்ல வேண்டும். அது முடியாவிட்டால் அமர்ந்த இடத்திலிருந்தபடியே குதிகால்களை மேலும் கீழுமாக அசைத்து ரத்த ஓட்டத்தைத் தடையில்லாமல் செய்யலாம். 1 2 3
|