"ஒரே நேரத்தில் பல நோய்களை தடுக்கும், குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மாத்திரையை பற்றி குறிப்பிடுகிறோம்" என இவ்வாய்வை நடத்த உதவிய ஹார்வர்டு மருத்துவ கல்லூரி நோய்கூற்றியல் நிபுணர் மருத்துவர் டேவிட் சின்கிளேர் கூறினார்.
சின்கிளேர் இவ்வாய்வின் அடிப்படையில் மருந்துத் தயாரிப்பில் ஈடுபடும் சார்றீஸ் மருந்து நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு உதவினார். சிர்டுயூன்ஸ் என்ற வகை நொதியங்களே மிக முக்கியமானவை. இவற்றை SIRT 1, SIRT 2 ஆகிய மரபணுக்கள் கட்டுப்படுத்துகின்றன. கடந்த ஆண்டு, SIRT1 வகை மரபணுவை தூண்டும்போது யீஸ்ட் உயிரணுக்களின் ஆயள் நீட்டிக்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
நியூயார்க் கார்னெல் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களிலும் உள்ள தனது நண்பர்களுடன் இணைந்து உழைத்த சின்கிளேர் இன்னும் இரண்டு சிர்டுயின் மரபணு வகைகளான SIRT 3, SIRT 4 ஆகியவற்றின் செயல்பாடுகளை இனங்கண்டார். இந்த மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படும் நொதியத்தில் உள்ள உயிரணுக்களின் உள்ளே ஆற்றல் தருகின்ற சிறுபகுதியான மைட்டோகான்றியாவை இவை பாதுகாக்க உதவுவதை கண்டறிந்தார்.
SIRT 3, SIRT 4 என்ற இரு மரபணுக்களும் மைட்டோகான்றியாவுக்கு தேவையான புரதத்தை உருவாக்கி அனுப்புகின்றன........ நாம் நலமுடனும் இளமையாகவும் இருக்க உதவும் இவை உயிரணுக்களின் உள்ளே இருக்கும் ஆற்றல் அணுத்துகள்கள் எனலாம். நமக்கு வயதாக ஆக, இவற்றை நாம் இழக்கிறோம். அவையும் தங்கள் வீரியத்தை இழக்கின்றன. நாம் முதுமையடையும் போது நமது உடலின் உயிரணுக்களை நலமுடனும், நீண்ட ஆயுளுடனும் வைத்திருக்க, அதாவது அவை எதிர்கொள்ளும் மரபணுச் சிதைவு மற்றும் அழுத்தங்களை சமாளிக்க இந்த இரு மரபணுக்களும் முக்கிய பங்களிக்கின்றன.
பிற ஆய்வுகள் வழியாக உயிரணுவின் கரு மற்றும் இதரப்பகுதிகள் அழிந்து விட்டாலும் மைட்டோகான்றியாக்கள் உயிரூட்டத்துடன் இருந்தால் உயிரணு இயங்க முடியும் என சின்கிளேரும் அவரது சகாக்களும் ஆய்ந்தறிந்தனர். உண்ணா நோன்பு இருப்பது NAD என்ற புரதத்தின் அளவை உயர்த்துகிறது. இது உயிரணுக்களின் மைட்டோகான்றியாவிலுள்ள SIRT 3, SIRT 4 மரபணுக்களை தூண்டுகிறது. இதன் மூலம் மைட்டோகானறியாக்கள் இளமையுடன் இருக்க முடியும். முதுமையோடு தொடர்புடைய நோய்களுக்கான எதிர்ப்பு ஆற்றல் கொண்ட மருந்தியல் ஆய்வின் இலக்குகளாக இவ்விரு மரபணுக்களை கொள்ளலாம். ஒரு சிறிய மூலக்கூறு அல்லது மாத்திரை மூலம் நேரடியாக NAD புரதம் அல்லது SIRT 3, மற்றும் SIRT 4 மரபணுக்களின் அளவை மைட்டோகானடறியாவில் அதிகரிக்கலாம். அத்தகைய மாத்திரையை முதுமையுடன் தொடர்புடைய பல நோய்களுக்கு பயன்படுத்தலாம் என சின்கிளேர் தெரிவிக்கிறார்.
1 2 3
|