ஏடுத்துக்காட்டாக இதய நோய், புற்று நோய், எலும்பு தேய்வு, கண்புரை ஆகியவை.
அதே வேளையில், இயற்கையான வழிமுறைகள் மூலம் முதுமையடைவதை

நீட்டிக்கும் உடலின் இயல்பான ஒரு இயக்கத்தை கண்டறிந்து இந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க திட்டமிடுகின்றனர். சார்றீஸ் மருந்து ஆய்வகம் இவ்வகை மருந்தை தயாரிக்க ஆய்வு மேற்கொண்டுள்ளது. SRT 501 என்ற மருந்து பரிட்சார்த்த ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சோதனையில் நிரிழிவு நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. "இத்தகைய ஆச்சரியம் தரும் தரவுகள் சிர்டுயின் நொதியங்களை முதுமை நோய்களுக்கான மருந்தாய்வுகளை வளர்க்கும் ஆர்வமிகு இலக்குகளாக உறுதி செய்யும்" என சார்றீஸ் மருந்து ஆய்வகத்தின் தலைமை அதிகாரி மருத்துவர் கிறிஸ்டோபா வெஸ்ட்ஃபால் தெரிவிக்கிறார்.
"ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்"
என்பது தான் இயற்கை. இந்நிலையில் முதுமையில் இளமை காண விளைவதில் வியப்பென்ன? பக்கவிளைவுகள், பின்விளைவுகள் இல்லாமல் முதுமை கால நோய்களுக்கான மருந்தாக வருகின்ற புதிய கண்டுபிடிப்புகளை மனிதகுலம் என்றும் வரவேற்கும். 1 2 3
|