• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-08 10:40:34    
சீனாவின் எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தளம்

cri

சீனாவின் எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தளம்

சீன வானொலி நிலையம். வணக்கம். நேயர்களே, இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சியில் Panjin நகரில் சீனாவின் எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தளம் பற்றி கூறுகின்றோம்.

அறிவிப்பாளர் சரஸ்வதி

சீனாவின் Liaoning மாநிலத்தின் தென் மேற்குப் பகுதியில் ஒரு கடற்கரை நகரம் உண்டு. அதன் பெயர் Panjin. சீனாவின் வட கிழக்குப் பழைய தொழில் தளங்களின் மறுமலர்ச்சி மற்றும் Liaoning கடற்கரைப் பொருளாதார மண்டலத்தின் பெரும் வளர்ச்சியுடன், Panjin பொருளாதார வளர்ச்சி மண்டலம், செழிப்பான இயற்கை மூலவளம், வசதியான போக்குவரத்து மற்றும் செம்மையான சுற்றுச் சூழலைப் பயன்படுத்தி, எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தொழில் துறையை வளர்க்கப் பாடுபட்டு வருகிறது. சீன எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தொழில் தளத்தைக் கட்டியமைத்து வருகிறது.

Panjin நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் Chenhaibo எமது செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது:

எண்ணெய் மற்றும் எரிவாயு மூலவளத்தின் உற்பத்தி அளவு குறைந்து வருகிறது. மூலவளக் கட்டுப்பாடு, Panjin பொருளாதார வளர்ச்சிக்கு மேன்மேலும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. எனவே, இந்த மூலவள ரக நகர், தொடரவல்ல வளர்ச்சியை எப்படி நிறைவேற்றுவது என்பது, மேன்மேலும் அவசரப் பணியாக மாறி வருகிறது. இதற்காக, 2006 முதல் 2010 வரையான 11வது 5 ஆண்டு திட்டக்காலத்தில் Panjin நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சி பற்றிய மூன்று முக்கிய கடமைகளை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். தொடர்த் தொழிலைப் பெரிதும் வளர்த்து, இம்மூலவள ரக நகரின், தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவது என்பது முதலாவது கடமையாகும் என்று அவர் கூறினார்.

Chenhaibo வற்புறுத்திய தொடர்த் தொழிலை வளர்ப்பது என்பது, Panjin நகரின் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலவள மேம்பாட்டை வெளிக்கொணர்ந்து, எண்ணெய் அகழ்வு மற்றும் வளர்ச்சியிலிருந்து எண்ணெய் சாதனத் தயாரிப்பு, எண்ணெய் தொழில் நுட்பச் சேவை முதலியவற்றுக்கு மாறிச்செல்வதாகும். சுருங்கக்கூறின், சர்வதேசச் சந்தையில், எண்ணெய் சாதனங்கள் மீதான வலிமையான தேவைகளைப் பயன்படுத்தி, இந்நகரத்தை, சீன எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தளமாகக் கட்டியமைப்பதாகும்.

இந்த வளர்ச்சி நெடுநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, 2005ம் ஆண்டு, Panjin நகரம், பொருளாதார வளர்ச்சி மண்டலத்தை நிறுவியது. அதிக முன்னுரிமைகளால், எண்ணெய் சாதனத் தயாரிப்புத் துறையில் உயரிய, புதிய தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களை அது ஈர்த்தது. வளர்ச்சி மண்டலம், உயரிய, புதிய எண்ணெய் தொழில் நுட்பப் பூங்காவைச் சிறப்பாக உருவாக்கியுள்ளது. எண்ணெய் சாதனத் தயாரிப்பு, எண்ணெய் வேதியியல் சேவை மற்றும் பிளாஸ்திக் வேதியியல் தொழில் உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றை வளர்க்க, முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, சில பெரிய எண்ணெய் சாதனத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள், இம்மண்டலத்தில் கிளை நிறுவனங்களைக் கட்டியமைத்துள்ளன.

1 2 3