Liaohe Baoshi எண்ணெய் சாதனத் தொழில் நிறுவனம், மத்திய மேற்குப் பகுதியைச் சேர்ந்த Baoji எண்ணெய் இயந்திர தொழில் நிறுவனத்தாலும் Liaohe எண்ணெய் அகழ்வு பணியகத்தாலும் கூட்டாக அமைக்கப்பட்டது. இத்தொழில் நிறுவனம், எண்ணெய் துளைத்தல் பொறியை முக்கியமாக ஆய்ந்து உற்பத்தி செய்கிறது. மொத்த முதலீட்டுத் தொகை, 200 கோடி யுவானை எட்டியது. இந்நிறுவனத்தின் தலைமை மேலாளர் Hudexiang உற்பத்திப் பணிக்களத்தில் எமது செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது:
சீனாவின் எண்ணெய் சாதனங்களை உற்பத்தி செய்யும் பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும், மேற்கு பகுதியில் இருக்கின்றன. ஆனால், அங்கு துறைமுகம் இல்லை. Dalian துறைமுகம், எமது நகரின் அருகில் உள்ளது. அத்துடன், நம் நகரை, துறைமுக நகரமாக கட்டியமைத்துக் கொண்டிருக்கின்றோம். இட அமைவின் மேம்பாட்டுகள் நன்கு தெரிகின்றன என்று Hudexiang தெரிவித்தார்.
தற்போது Panjin பொருளாதார வளர்ச்சி மண்டலத்திலுள்ள எண்ணெய் தொழில் நுட்பப் பூங்காவின் முதல் கட்ட திட்டப்பணியில் பங்கேற்றுள்ள சீன மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 60 ஆகும். இதில் 28 தொழில் நிறுவனங்கள், எண்ணெய் சாதனத் தயாரிப்பு மற்றும் எண்ணெய் திட்டப்பணித் தொழில் நுட்பச் சேவையில் ஈடுபடுகின்றன. Panjin நகரப் பொருளாதார வளர்ச்சி மண்டலத்தின் துணை இயக்குநர் Liyongfu கூறியதாவது:
எண்ணெய் வயலின் உற்பத்தி மற்றும் அகழ்வு பற்றி நாம் சில சாதனத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களைப் புகுத்தியுள்ளோம். உயரிய, புதிய எண்ணெய் தொழில் நுட்பப் பூங்கா முழுவதிலும் முதலீட்டுச் சூழல் தொடர்ந்து மேம்பட்டு வருவதோடு, மேலதிகமான எண்ணெய் சாதனத் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி தொழில் நிறுவனங்கள், இந்நகருக்கு வருகை தந்து முதலீடு செய்து தொழிற்சாலைகளைக் கட்டியமைக்கும் என்றார் அவர்.
Panjin நகரம், சீனாவின் மிக பெரிய சாதனத் தயாரிப்புத் தொழில் துறை தளங்களில் ஒன்றாகும். Liaoning மாநிலத்தின் Shenyang, Dalian, An'shan, Fushun முதலிய தொழிற்துறை நகரங்கள், மூலப் பொருட்கள் மற்றும் இதற்கு ஏற்ற உதிரிப்பாகங்களை இந்நகருக்கு வழங்க முடியும். Panjin நகர், எண்ணெய் சாதனத் தயாரிப்பு தொழில் துறை தளமாக வளர்வதற்கு அவை சிறந்த ஆதரவு அளிக்கின்றன.
1 2 3
|