ஜூலை திங்களின் இறுதியில், சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள பல நகரங்களில் 2007ம் ஆண்டு தைவானின் தரமான வேளாண் பொருட்கள் சுற்றுப் பயணக் கண்காட்சி நடைபெற்றது. இரு கரையின் வேளாண் துறைப் பரிமாற்றச் சங்கம், தைவான் மாநிலத்தின் வேளாண் துறைச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனால், தைவானின் தரமான வேளாண் பொருட்களை, பெருநிலப்பகுதி மக்கள், மேலும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது செல்வாக்கை விரிவாக்கியுள்ளது. இரு கரையின் வேளாண் துறையின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றியுள்ளது.
ஜூலை திங்கள் 20ம் நாள் முதல், 25ம் நாள் வரை, பெருநிலப்பகுதியிலுள்ள ஷாங்காய், நான்ஜிங், பூச்சோ, வூஹான், குவாங்சோ, தாலியன் ஆகிய 6 நகரங்களில் இந்தச் சுற்றுப் பயணக் கண்காட்சி நடைபெற்றது. தைவான் மாநில வேளாண் துறைச் சங்கம், பல்வேறு மாவட்டங்கள், வட்டங்களின் வேளாண் துறைச் சங்கங்கள், தைவான் வேளாண் பொருட்கள் தொழில் நிறுவனங்கள் இதில் ஒன்றன்பின் ஒன்றாகக் கலந்து கொண்டன. பெருநிலப்பகுதியின் உடன்பிறப்புக்களுக்கு தைவானின் தரமான வேளாண் பொருட்களை அவை ஆர்வத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளன. தைவானின் நான் தோ மாவட்டத்தைச் சேர்ந்த Chen zhiwei நமது செய்தியாளரிடம் கூறியதாவது:
"சில வணிக வாய்ப்புகளைத் தேடுவதற்காக, நாம் இங்கு வந்தோம். பெருநிலப்பகுதியுடனான ஒத்துழைப்பு இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்."
தைவானின் தரமான வேளாண் பொருட்கள் சுற்றுப் பயணக் கண்காட்சியில் இடம்பெற்ற பல்வகை புத்தம் புதிய பழங்கள், காய்கறிகள், அரிசி, தேயிலை, நீர்வாழ்வன, அவரைப் பொருட்கள் முதலிய 400க்கு மேலான வேளாண் பொருட்களும் பதனீட்டுப் பொருட்களும், பெருநிலப்பகுதியின் நுகர்வோரை ஈர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1 2 3
|