• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-15 14:12:55    
பெருநிலப்பகுதிச் சந்தையில் நுழைந்த தைவானின் வேளாண் பொருள்

cri

கடற்கரை நகரான தாலியன் நகரில், கண்காட்சியைப் பார்வையிட்டோர், தைவானில் விளையும் பழங்களைப் பெரிதும் விரும்பினர். பலர் அவ்விடத்திலே பழங்களைச் சுவைத்துப் பார்த்தனர். 4வது வகுப்புப் பள்ளிச் சிறுவன் Geng Zhi ஆர்வத்துடன் தைவானின் சிறப்பு பழமான கொய்யாவைச் சுவைத்துக் களித்தான்.

இது தனிச்சிறப்பு வாய்ந்தது. முன்பு, நான் இதைக் கண்டதில்லை. இது, சுவையாகவும் அதிக சாரமுடையதாகவும் இருப்பதாக சீன மொழிப் பாடம் கூறுகிறது என்று அவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.

இக்கண்காட்சி வெற்றிகரமாக நடைபெறுவது, பெருநிலப்பகுதியிலுள்ள தைவான் வேளாண் பொருட்களின் செல்வாக்கைப் பெரிதும் உயர்த்தும். இதன் விளைவாக, தைவான் வேளாண் பொருட்கள், பெருநிலப்பகுதியில் இயல்பாக விற்பனை செய்யப்படும் என்று தைவான் மாநில வேளாண் துறைச் சங்கத்தின் தலைமைச் செயலர் Zhang Yongcheng தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"இக்கண்காட்சி மூலம், தைவானின் தரமான வேளாண் பொருட்கள் என்ன, பெருநிலப்பகுதியிலுள்ள தைவானின் வணிகர்கள் பயிர் செய்யும் வேளாண் பொருட்கள் என்ன என்பனவற்றை மக்கள் தெளிவாகக் கண்டறியலாம். இத்தகைய கண்காட்சி தொடர்ந்து நடைபெற்ற வேண்டும்; மக்கள், ஓய்வு நேரத்தில் இக்கண்காட்சியை, பார்வையிட வேண்டும். தைவானின் வேளாண் பொருட்கள் என்ன என்பது பற்றி தைவான் விவசாயிகள், நேரில் உங்களுக்கு விளக்கிக் கூற வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்"

1 2 3