ஷாங்காய் மாநகரத்தின் புவியியல் அமைவும், அதன் சிறந்த முதலீட்டுச் சூழலும், இச்சுற்றுப் பயணக் கண்காட்சி ஷாங்காயை முக்கியக் கண்காட்சி இடமாகத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும் என்று அவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறிதாவது:
தைவான் வேளாண் பொருட்களின் தரம், தலைசிறந்து விளங்குகின்றது என்பது எமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். தற்போதைய தைவானின் வேளாண் பொருட்களில், பதனீட்டுத் தொழில் நுட்பங்கள், மேலும் முக்கியமாக இருக்கின்றன. வேளாண் பொருட்களின் உற்பத்தி மதிப்பை உயர்த்துவது மிக முக்கியமானது. ஷாங்காய், முழு பெருநிலப்பகுதியின் மிகப் பெரிய நுகர்வுச் சந்தை என்பதை நாம் கருதுகின்றோம். இதன் மூலம், தைவானின் வேளாண் பொருட்கள், பெருநிலப்பகுதியில் ஒழுங்காக விற்பனை செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.
சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி, 2007ம் ஆண்டு தைவானின் தரமான வேளாண் பொருட்கள் சுற்றுப் பயணக் கண்காட்சியை நடத்த உதவும் ஒரே நிறுவனமாகும். இது மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இவ்வங்கி, இரு கரை தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கு இணைப்புப்பாலமாக ஆக்கப்பூர்வமாகச் சேவை செய்து வருகிறது. இரு கரை பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் ஒத்துழைப்புக்குப் பெரிய பங்காற்றியுள்ளது. தைவான் விவசாயிகளின் தொழில் முனைவுக்கும் நிதி திரட்டலுக்கும் உதவி செய்ய, இவ்வங்கி, ஷாங்காய் கண்காட்சியின் போது கண்காட்சி அரங்கத்தை நிறுவி, நிதி திரட்டல் பற்றிய ஆலோசனைகள் கூறியுள்ளன.
சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் Li Jun கூறியதாவது:
"தைவானின் வேளாண் பொருட்களுக்கான ஒத்துழைப்பு பொருளாதார அமைப்புகள், கூட்டு முதலீட்டு வேளாண் தொழில் நிறுவனங்கள், வேளாண் பொருட்கள் நாணய ஒத்துழைப்புச் சந்தைகள் ஆகியவற்றுக்கு வலுவான நிதி உதவிகளைத் தொடர்ந்து வழங்குவோம்."
கடந்த சில ஆண்டுகளில், இரு கரையின் தொடர்புடைய தரப்புகளின் முயற்சி மூலம், வேளாண் துறையில் இரு கரையின் பரிமாற்ற நடவடிக்கைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. பல மாதிரிகள் ஆராயப்பட்டுள்ளளன. இந்தக் கண்காட்சியே, தைவானின் வேளாண் பொருட்கள் பெருநிலப்பகுதியில் விற்பனை செய்து, சந்தை செல்வாக்கை விரிவாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். இதன் மூலம், வேளாண் துறையில் இரு கரையின் பரஸ்பர ஒத்துழைப்பைத் தூண்டி, வணிக வாய்ப்பைக் கூட்டாக அனுபவிக்க முடியும் என்று இரு கரையின் வேளாண் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேயர்கள், இது வரை, பெருநிலப்பகுதிச் சந்தையில் நுழைந்த தைவானின் வேளாண் பொருட்கள் பற்றிக் கேட்டீர்கள். இத்துடன் மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகிறது. 1 2 3
|