மஞ்சோலி நகரம், உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதியில் இருக்கின்றது. இது, நூறு ஆண்டு கால வரலாறு வாய்ந்த நுழைவாயில் நகராகும். இது, சீனாவின் வடகிழக்கு மற்றும் வடக்கு பொருளாதார மண்டலங்களை ஒட்டி அமைகின்றது. இதன் வடக்கில், ரஷியாவும். இதன் மேற்கில், மங்கோலியாவும் உள்ளன. இது, சீனாவில், மிகப் பெரிய தரை நுழைவாயிலாகும்.
நாள்தோறும் காலையில், பல்வேறு வணிகப் பொருட்களை வாங்க, பெருவாரியான ரஷிய வணிகர்கள் நெடுஞ்சாலையின் நுழைவாயில் மூலம், மஞ்சோலியில் நுழைகின்றனர். மஞ்சோலியில், வாழ்கின்ற, பணி புரிகின்ற, அல்லது சுற்றுப் பயணம் செய்கின்ற ரஷியர்கள் மற்றும் மங்கோலிய நாட்டவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஆண்டு முழுவதும், அங்குள்ள முக்கிய தங்கு விடுதிகள் மற்றும் உணவகங்களில் வசிப்போர் விகிதம், 90 விழுக்காட்டுக்கு மேலாகும். மஞ்சோலிக்கு ஒரு ஈவு வணிக நகர் உண்டு. மஞ்சோலியில்,சரக்கு மொத்த விற்பனை, முன்பதிவு சரக்கு மொத்த விற்பனை, பிரதேச முகவாண்மை,இணைய வழி வர்த்தகம் உள்ளிட்ட பல்வகை நவீன வர்த்தக முறைகளைக் கொண்ட ஈவு வணிக நகரும் உள்ளது. சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள zhe jiang மாநலத்தின் ஈவு நகரத்தைச் சேர்ந்த feng qianmin மஞ்சோலி ஈவு வணிக நகரத்தின் ஈவு முதலீட்டு வணிகர்களில் ஒருவர் ஆவார். தன்னிகரற்ற ரஷியாவுக்கான வர்த்தகச் சூழலால், தான் தெற்குப் பகுதியிலிந்து, . மஞ்சோலிக்கு ஈர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது.
.
இப்போது, நாம், ரஷியா மற்றும் மங்கோலியாவுடன் வர்த்தகம் செய்கின்றோம். உற்பத்திப் பொருட்கள் முக்கியமாக ரஷியாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கைக்காரர்கள், ரஷிய வியாபாரிகள் ஆவர். ஈவு நகர் போல, மஞ்சோலியின் வளர்ச்சியின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பும் மிக நல்லது. இவ்வடத்தின் கட்டுமானம், சீன-ரஷிய வர்த்தகம், மக்கள் நடமாட்டம் சரக்குப் புழக்கம் ஆகியவை விரைவாக வளர்ந்து வருகின்றன. இதில் முதலீடு செய்வதில் நாம் முழு நம்பிக்கை
1 2 3
|