கொள்கின்றோம். மஞ்சோலி சுங்கத் துறையின் புள்ளிவிபரத்துக்கு இணங்க, 2007ம் ஆண்டின் முற்பாதியில், மஞ்சோலி நுழைவாயில் மூலம் செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதிச் சரக்குகளின் அளவு, ஒரு கோடியே 26 லட்சம் டன்னைத் தாண்டியுள்ளது. வார்த்தக மதிப்பு 405 கோடி அமெரிக்க டாலராகும். இவை, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட,முறையே 15.7 விழுக்காடும் 30.4 விழுக்காடும் அதிகமாகும். இவை, வரலாற்றில் மிக அதிகமானவை. மஞ்சோலி நுழைவாயில் அதிகாரி பீங் கூறியதாவது:
இப்போது, ஆண்டுதோறும் நெடுஞ்சாலை நுழைவாயில் மூலம் ஏற்றிச்செல்லப்படும். சரக்குகளின் அளவு, 30 லட்சம் டன்னை எட்டியுள்ளது. பயணியர் எண்ணிக்கை 3லட்சத்தை தாண்டியுள்ளது. இருப்புப் பாதை நுழைவாயில் மூலம் முக்கியமாகச் சரக்குகள் அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டில், 2 கோடியே 17 லட்சத்து 30 ஆயிரம் டன் சரக்குகளின் போக்குவரத்து, நிறைவேற்றப்பட்டது என்றார் அதிகாரி bing.
மஞ்சோலி நுழைவாயில் அலுவல் மாளிகையில், கூட்டம் கூட்டமான ரஷிய விருந்தினர்கள் வரிசையாக நின்று, சுங்கத் துறையைக் கடப்பதை எமது செய்தியாளர் ஒருவர் பார்த்தார். வெட்டுமர வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷிய வணிகர் ஒருவர் கூறியதாவது:
3 ஆண்டுகளுக்கு முன்பு, நான் அடிக்கடி மஞ்சோலிக்கு வரத்துவங்கினேன். இவ்விடம் நன்றாக இருக்கின்றது. கட்டுமானப் பணியும், மிக வேகமாக நடைபெறுகின்றது. இப்போது, சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளவில்லை என்ற போதிலும், வாய்ப்பு இருந்தால், நான் ஒத்துழைக்க விரும்புகின்றேன் என்றார் அவர்.
1 2 3
|