எல்லைப் புற வர்த்தகத்தின் அளவு இடைவிடாமல் விரிவாகிவருவதுடன், தற்போது, மஞ்சோலி நுழைவாயில், 100 கோடி அமெரிக்க டாலருக்கு மேலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் ஆற்றலையும் அளவையும் கொண்டுள்ளது. அத்துடன், முன்பு, வர்த்தக முறை, பண்டமாற்று வர்த்தகத்தை முக்கியமாகக் கொண்டது. இப்போது, அது ரொக்க அன்னிய செலாவணி வர்த்தகத்தை முக்கியமாகக் கொண்டு விளங்குகின்றது. ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களின் வகைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு, கழிவு உருக்கு, வேதியியல் உரம் ஆகியவை, முக்கிய இறக்குமதிப் பொருட்களாகும். காய்கறி மற்றும் பழவகைகள், ஆடைகள் வீட்டுப் பயன்பாட்டு மின்சாரக் கருவிகள் முதலியன, முந்தைய ஏற்றுமதிப் பொருட்களாகும். இப்பொழுது, வெட்டுமரம். பெற்றோலிய எண்ணெய் வேதியியல் தொழிலுக்கான மூலப்பொருட்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. சாதனக் கோவைகள் முக்கியமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இன்று, ரஷிய மற்றும் மங்கோலிய சந்தைகளின் தேவைக்கு ஏற்ப, மஞ்சோலி உள் நாட்டு உற்பத்திப்பொருட்களின் முனையமாகச் சேவை செய்து வருகிறது. எல்லைப்புற வர்த்தகம் மேலும் மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மஞ்சோலி நுழைவாயிலின் இவ்வாண்டுக்கான சரக்குப்போக்குவரத்து குறியளவு, 2 கோடியே 30 லட்சம் டன்னைத் தாண்டுவதாகும் என்று தெரிய வருகின்றது.
மஞ்சோலியின் எதிர்கால வளர்ச்சி பற்றி பேசுகையில், இந்த நகராட்சித் துணை தலைவர் ling li கூறியதாவது.
"மஞ்சோலியை, வடகிழக்கு ஆசியாவின் சர்வதேசச் சரக்குப் புழக்க மையமாக மாற்று அன்றியும், சீன-ரஷிய எரியாற்றல் போக்குவரத்து தளமாகவும் சீன-ரஷிய எல்லைப்புற தாராள வர்த்தக மண்டலமாகவும் மாற்றுவோம். இது, நமது அடுத்த குறிக்கோளாகும்." 1 2 3
|