கலை.......5 ஆண்டுகளுக்கு முன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது தேசிய மாநாடு நடைபெற்ற பின் சீனக் கிராமப்புறங்களின் பொருளாதாரத் துறையில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டது என்பது பற்றி பார்க்கலாம்.
தமிழன்பன்........இது பற்றி நீங்கள் தான் விவரிக்க வேண்டும்.
கலை.......சரி நான் முதலில் அறிமுகப்படுத்துகின்றேன். பிறகு நீங்கள் வினாக்களை கேளுங்கள்.
தமிழன்பன்...... அப்படியே ஆகட்டும்.
கலை.....கடந்த சில ஆண்டுகளில் சீனக் கிராமப்புறப் பொருளாதாரத் துறையில் முழுமையான நிதானமான ஒன்றிணைந்த வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தானியங்கள் உள்ளிட்ட முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்களின் விளைச்சல் தொடர்ந்து நிதானமாக வளர்ந்துள்ளது.
தமிழன்பன்.......அப்படியிருந்தால் விவசாயிகளின் வருமானம் தொடர்ச்சியான நிலையில் அதிகரிப்பதில் ஐயம் ஒன்று மில்லை. அப்படித்தானே?
கலை.......ஆமாம். அதேவேளையில் சீன அரசுடைய வேளாண் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்திற்கான ஒதுக்கீட்டு அளவும் மேலும் பெருகியுள்ளது. வேளாண் உற்பத்தி நிலைமை மேம்பட்டுள்ளது. விவசாயிகள் சிரிததமுகத்துடன் நல்ல வருமானம் ஈட்டுகின்றனர்.
தமிழன்பன்........இந்நிலைமையில் கடந்த ஆண்டில் சீனாவின் தானிய விளைச்சல் எவ்வளவு என கூறமுடியுமா?
கலை......கடந்த ஆண்டில் சீனாவின் தானிய விளைச்சல் 50 ஆயிரம் கோடி கிலோகிராமுக்குச் சமமானதாக இருந்தது.
தமிழன்பன்......தானியங்கள் தவிர வேறு வேளாண் பயிரிகளின் நிலைமை எப்படி இருந்தது?
கலை.....தற்போது, சீனா நவ தானியங்கள், பருத்தி, பழங்கள். காய்கறிகள், இறைச்சி வகைகள், முட்டை நீர் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் உற்பத்தியளவில் உலகில் முதல் இடம் பெற்றுள்ளது.
தமிழன்பன்......இந்த நிலைமையில் விவசாயிகளின் நபர்வாரியான வருமானம் எவ்வளவு?
கலை......2006ம் ஆண்டில் விவசாயிகளின் நபர்வாரியான வருமானம் 3500 யுவானை எட்டியது. இது 2005ம் ஆண்டில் இருந்ததை விட 7.4 விழுக்காடு அதிகமாகும்.
தமிழன்பன்........இச்சூழ்நிலையில் சீன அரசு கிராமப்புறங்களின் வளர்ச்சியை எப்படி கையாள்கின்றது?
1 2 3
|