• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-01 14:00:52    
நிதானமான வளர்ச்சியிலுள்ள சீனக் கிராமப்புற பொருளாதாரம்

cri

கலை......கடந்த சில ஆண்டுகளாக சீன அரசு கிராமப்புறங்களின் வளர்ச்சியை நடப்பு ஆண்டுக்கான பணியின் மையமாக கருதுகிறது. அத்துடன் அதற்கு மேலும் அதிகமான முன்னுரிமை கொள்கைகளையும் வழங்கியுள்ளது. இது பற்றி சீன துணை வேளாண் அமைச்சர் இன் சன் ச்செ தெரிவித்த கருத்தை கேளுங்கள்.

தமிழன்பன்........கட்சியின் 16வது தேசிய மாநாட்டுக்கு பின் சீன அரசு வேளாண்மை, கிராமப்புறங்கள், விவசாயி நலன் ஆகிய மூன்றையும் அதன் பணியின் முக்கிய மையங்களாக கருதி அவற்றை வளர்ப்பதற்கான கொள்கைகளை தொடர்ந்து முழுமையாக்கி வலுபடுத்தியுள்ளது என்றார் அவர்.

கலை.......விவசாயிகளுக்கான முன்னுரிமை கொள்கை விவசாயிகளுக்கு உண்மையாகவே நன்மைகளை தந்துள்ளது.

தமிழன்பன்........இது பற்றி நீங்கள் எடுத்துக்காட்டுடன் விவரியுங்களேன்?

கலை........மிக்க மகிழ்ச்சி. சீனாவின் சாங்துங் மாநிலத்தின் ச்சுப்போ நகரைச் சேர்ந்த ஹேன்தாய் மாவட்டத்தின் ப்பிமியௌ கிராம விவசாயி வுவான் ச்சோ தைய் அவர்களின் வாழ்க்கையை எடுத்துகாட்டி விளக்குகிறேன். அவர் கடந்த ஆகஸ்ட் திங்களில் சலுகை விலையில் பெரிய ரக இழுவைப் பொறி ஒன்றையும் மக்காச்சோளம் அமோக அறுவை பொறி ஒன்றையும் வாங்கினார். அவருடைய அனுபவத்தை கேளுங்கள்.

தமிழன்பன்...........நான் இவ்விரண்டு பொறிகளையும் வாங்கும் போது அரசின் சலுகை விலையால் எனக்கு 20 ஆயிரம் யுவான் குறைவாக செலவானது. இவை எனக்கு அதிக வசதியை வழங்கியுள்ளன.

கலை........வுவான் ச்சோ தை மட்டுமல்ல ச்சுப்போ நகரைச் சேர்ந்த விவசாயிகள் பலர் மக்காச்சோளம் அமோக அறுவை பொறியை வாங்கியதால் நகர, மாவட்ட மற்றும் வட்ட நிலை அரசாங்கங்கள் தங்கள் நிதி வருமானத்திலிருந்து அவர்களுக்கு குறிப்பிட்ட நிதி உதவி வழங்கியுள்ளன.

தமிழன்பன்.........இக்கொள்கை எப்போது செயல்படுத்தப்பட்டது?

கலை.......2000ம் ஆண்டு.

தமிழன்பன்.......இதுவரை விவசாயிகளுக்கு வழங்கிய மொத்தத் தொகை எவ்வளவு தெரியுமா?

கலை......2007ம் ஆண்டு மட்டும் 50 லட்சம் யுவான் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்களுக்கு உதவித் தொகையானது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழன்பன்........சீன அரசின் முன்னுரிமை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின் வேளாண் துறை நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

கலை.......ஆமாம். விவசாயிகள் வேளாண்மையில் ஈடுபடும் உற்சாகம் பெருகியுள்ளது. முன்பு வெளியே வேலை தேடி சென்ற மக்கள் இப்போது ஊருக்குத் திரும்பி வேளாண்மையில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

தமிழன்பன்.......அப்படி திரும்பி வந்து வேளாண்மையில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களது கூற்றை பதிவு செய்யதுள்ளீர்களா?

கலை......கண்டிப்பாக. யான் ச்சு சியான் என்னும் விவசாயியின் கூற்றை கேளுங்கள்.

தமிழன்பன்....... வேளாண் வரி உள்ளிட்ட பல்வகை வரிகளை அரசு நீக்கியதால் இப்போது தரிசு நிலங்களை காண முடியாது. தற்போது ஒரு மோ நிலத்திற்கு அரசு வழங்கும் கோடை மற்றும் இலையுதிர் கால உதவித் தொகை மொத்தமாக 40 அல்லது 50 யுவானாகும். 15 மோ ஒரு ஹேக்டராகும். தவிர நீர் மின்சார செலவுக்கு நட்ட ஈடும் செய்கிறது என்று கூறினார்.

1 2 3