கலை....... தமிழன்பன் நீங்கள் கவனித்தால் யான் ச்சுன் சியான் குடும்பம் அவருடைய கிராமத்தில் மிக பெரிய வேளாண் குடும்பமாகும். பெருமளவில் பயிரிட்டாதால் அவருக்கு அரசு அதிகமான உதவி தொகை வங்கியுள்ளது. இவ்வாண்டு அவர் பெற்ற வருமானம் முந்திய ஆண்டுகளை விட அதிகமாகும்.
தமிழன்பன்......2006ம் ஆண்டில் சீனாவின் கிராமப்புறங்களில் வரி செலுத்துவதில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால் விவசாயிகளுக்கு கிடைத்த நன்மைகதள் என்ன?
கலை.........இக்கொள்கை நடைமுறைக்கு வந்த பின் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தமாக 12 ஆயிரம் கோடி யுவான் வரித் தொகை குறைக்கப்பட்டுள்ளது.
தமிழன்பன்.........வரிக் குறைப்பதில் சீன அரசு மேற்கொண்டது பாராட்டுதற்குரிய மாபெரும் முயற்சியே. கிராமப்புறங்களின் அடிப்படை கட்டுமானத்திலும் சமூகத் துறையிலும் சீன அரசு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது பற்றி எடுத்து கூறலாமா?
கலை.......நிச்சயமாக கூறலாம். சீனா கடந்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளின் கட்டுமானம் சமூக துறை ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. இதனால் வேளாண் உற்பத்தி சூழ்நிலை சீரடைந்துள்ளது. துணை அமைச்சர் இன் சன் சியெயின் கூற்றைக் கேளுங்கள்.
தமிழன்பன்..........பெருமளவில் குடும்ப அளவில் மீத்தேன் வாயு குளத்தை கட்டியமைப்பது, கிராம நெடுஞ்சாலைகள் மற்றும் மின்னாற்றல் வலைப்பின்னலை சீராக்குவது, கிராம வாசிகளின் பாதுகாப்பான குடி நீர் பிரச்சினையை தீர்ப்பது, புதிய ரக கிராமப்புற ஒத்துழைப்பு மருத்துவ சிகிச்சை அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை முன்னேற்றுவது, மிக குறைந்த வாழ்க்கைக்கான உத்தரவாத அமைப்பு முறையை நிறுவுவது போன்ற முயற்சிகளை சீன அரசு மேற்கொண்டுள்ளது.
கலை......மாபெரும் மாற்றங்கள் சீனாவின் கிராமப்புறங்களில் காணப்பட்ட போதிலும் பல புதிய நிலைமைகளும் புதிய முரண்பாடுகளும் நிலவுகின்றன.
தமிழன்பன்.........அவை என்னென்ன என விபரமாக சொல்லுங்கள்.
கலை.....புதிய அறைகூவல்கள் பற்றி குறிப்பிடுகையில் முதலில் சீன சமூக அறிவியல் கழகத்தின் பொருளாதார நிபுணர் ஹு ப்பி லியான் தெரிவித்த கருத்தை கேளுங்கள்.
தமிழன்பன்..........நவீன வேளாண்மைக்குத் தேவைப்படும் கோரிக்கைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் இப்போது ஒதுக்கீடு செய்துள்ள நிதி அளவு இன்னும் போதாது. நம்முடைய பொருளாதார அடிப்படை வசதிகளின் தரம் குறைவு. குறிப்பாக வேளாண் உற்பத்தி சூழ்நிலை இன்னும் தாழ்ந்தது. கிராமப்புறங்களின் சமூக காப்புறுதி அமைப்பு முறை மிகவும் பலவீனமானது.
கலை.......ஆகவே விரைவாக வளர்ந்து செழுமையாக்கப்பட்ட நிலைமையில் நாம் மேலும் பலவீன பகுதியை கண்டுபிடித்து ஆராய்ந்து அதற்கு முடிவுகடட வேண்டும். நிபுணர் ஹு ப்பின் லியானின் கூற்றை பார்த்தால் எதிர்காலத்தில் சீன அரசு வேளாண் துறையிலான ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்கும் என தோன்றுகின்றது.
தமிழன்பன்.......இப்படி முயற்சிப்பதன் மூலம் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளின் கட்டுமானம் மேலும் மேம்படும். விவசாயிகளின் நலன்கள் அதிகமாக பாதுகாக்கப்படும் என்று நம்புகின்றேன். 1 2 3
|