• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-19 21:36:25    
எரியாற்றலைச் சிக்கனப்படுத்திப் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது

cri

கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் பொருளாதாரம், உயர் வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால், பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்குமிடையிலான முரண்பாடு, நாளுக்கு நாள் பரவலாகக் காணப்பட்டுள்ளது. இம்முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக, 2010ம் ஆண்டுக்குள், சீனாவின் யுனிட் உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கான எரியாற்றல் செலவை, 2005ம் ஆண்டில் இருந்ததை விட, 20 விழுக்காடு குறைத்து, முக்கியமான மாசுப் பொருட்களின் வெளியேற்ற அளவை, 10 விழுக்காடு குறைக்கும் குறிக்கோளை, சீனா வகுத்தது.

ஆகஸ்ட் திங்களின் இறுதியில், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதுடன் தொடர்புடைய கருத்தரங்கில் கலந்து கொண்ட போது, சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணை இயக்குநர் Xie Zhenhua கூறியதாவது:

விரைவில், நாம், பின்வரும் பணிகளை முக்கியமாக முன்னேற்றுவோம். முதலாவதாக, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் இலக்குப் பொறுப்பு பற்றிய மதிப்பீட்டு அமைப்பு முறையை வலுப்படுத்துவது. இரண்டாவதாக, எரியாற்றலைப் பெரிதும் பயன்படுத்தி பசுங்கூட வாயுக்களைப் பெரிதும் வெளியேற்றும் தொழிற்துறை, அளவுக்கு மீறிய வேகத்தில் வளர்வதை உறுதியாகக் கட்டுப்படுத்துவது. மூன்றாவதாக, பின்தங்கிய உற்பத்தி ஆற்றலை நீக்குவதை அதிகரிப்பது. நான்காவதாக, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் முக்கியத் திட்டப்பணியின் செயல்பாட்டை விரைவுபடுத்துவது. ஐந்தாவதாக, முக்கிய தொழிற்துறைகள், முக்கிய தொழில் நிறுவனங்கள், முக்கிய துறைகள் ஆகியவற்றிலுள்ள எரியாற்றலைச் சிக்கனப்படுத்திப் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் பணிகளைச் சீராகக் கையாள்வது என்று அவர் கூறினார்.

சீனத் தேசிய சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம், மாபெரும் அரசுசார் தொழில் நிறுவனங்களின் எரியாற்றலைச் சிக்கனப்படுத்திப் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கும் பணி மீது, பரிசு தண்டனை அமைப்பு முறையை நடைமுறைப்படுத்தும் என்று அதன் இயக்குநர் Li Rongrong ஆகஸ்ட் திங்களின் இறுதியில் அறிவித்தார். மாபெரும் அரசுசார் தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்களின் விற்பனைச் சாதனைகள் மீதான பரிசோதனையில் இப்பணி மேற்கொள்ளப்படும். கடமையை நிறைவேற்றாத நிலையில், பொருளாதாரத் தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளும் அல்லது பதவி நீக்கும் என்றும் அவர் கூறினார்.

1 2 3