• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-11-19 21:36:25    
எரியாற்றலைச் சிக்கனப்படுத்திப் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது

cri

 

மரபு வழி நிலக்கரி மின்னாக்கி தொழில் நுட்பங்களை விட, பசுமை நிலக்கரி மின்சார மின்னாக்கி தொழில் நுட்பங்கள், இரு குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளன. முதலாவதாக, நிலக்கரியின் ஒட்டுமொத்த பயன்பாட்டுப் பயன், பெரிய அளவில் அதிகரிக்கலாம். முறைமையின் மொத்த பயன், மரபு வழி நிலக்கரியால் மின்னாக்கும் இயந்திரங்களின் பயனை விட, சுமார் 10 விழுக்காடு அதிகம். இரண்டாவதாக, கந்தக வாயு உள்ளிட்ட மாசுப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. பல்வேறு மாசுப் பொருட்களும் பசுங்கூட வாயுக்களுக்கும் பெரிதும் குறைந்துள்ளன என்று அவர் கூறினார்.

எரியாற்றலைச் சிக்கனப்படுத்திப் பசுங்கூட வாயுக்களின் வெறியேற்றத்தைக் குறைக்கும் பணியை மேற்கொள்வது, தொழில் நிறுவனங்களுக்கு மிகுந்த நன்மைகளை விளைவிக்கிறது என்று சீன அலுமினியத் தொழில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் Lv Youqing தெரிவித்தார்.

எரியாற்றலைச் சிக்கனப்படுத்திப் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது, மூலவள பயன்பாடு ஆகிய பணிகளை ஆழமாக மேற்கொள்வது, தொழில் நிறுவனங்களின் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் பணியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியையும் மேம்படுத்தியுள்ளது. தவிர, தாங்களாகக் கண்காணிப்பது, பற்றாக்குறையை கண்டறிவது, இடைவிடாமல் மேம்பாடு காண்பது ஆகிய போக்குகளில், தொழில் நிறுவனங்கள், மேலாண்மை நிலையையும், வளர்ச்சித் தரத்தையும் உயர்த்தி, முக்கிய தொழில் நுட்பங்களின் மேம்பாட்டை நனவாக்கி, உற்பத்திப் பொருட்களின் தரத்தைச் சீராக உயர்த்தியுள்ளன என்று அவர் கூறினார்.

 


1 2 3