செயலுக்கு செயல் மீனை கொடுக்காதே தூண்டிலை கொடு என்று உதவி பற்றி குறிப்பிடும் போது வலியுறுத்துவார்கள். மீனை கொடுத்தால் அவர் சாப்பிட்டு விட்டு மீண்டும் நம்மிடமே உதவிக்கு வருவார். ஆனால் தூண்டிலை கொடுத்தால் மீன்பிடித்து வியாபாரம் செய்து அவருக்கான அனைத்தையும் வாங்கிக்கொள்வார் என்பது தான் அதன் அடிப்படை. இவ்வாறு செய்தால் அவர் நம்மை சாராது அவரது காலில் நிற்க முடியும். கல்வி உதவி என்பது மீனைக் கொடுக்காமல் தூண்டிலை கொடுக்கும் ஒரு முயற்சியே. அப்படிப்பட்ட முயற்ச்சியை ஏழைகளே செய்யும் போது பாராட்ட தான் வேண்டும். ஏழை வேளாண் குடும்பத்திலிருந்து வந்த பல்கலைக்கழக மாணவர் Gao Kai ஏழ்மை மிகுந்த கிராமங்களிலுள்ள 24 மாணவர்களுக்கு உதவியுள்ளார். இவ்வாறு 24 மாணவர்களுக்கு உதவி செய்ய Gao Kai வசதியானவர் அல்ல. உள்ளுரில் சுன் என்ற குடும்ப பெயரைக் கொண்ட ஒருவரிடமிருந்து ஆண்டிற்கு 3,000 யுவான் உதவித்தொகை பெற்று தான் அவரே Shaanxi மாநிலத்திலுள்ள ஸிஆன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துள்ளார். சமூகத்திற்கு நான் எதையாவது திருப்பி கொடுக்க வேண்டும் என எண்ணினேன். எனவே ஓய்வு நேரங்களில் கழிவுப்பொருட்களை சேகரித்து விற்று பணம் சேமிக்க தொடங்கினேன். அதை தான் கல்விக்கு உதவினேன் என்று Gao Kai பணிவோடு கூறுகிறார். 180 பேர் கொண்ட தன்னாவ தொண்டர்கள் குழுவை அவர் உருவாக்கி இனைவரும் இணைந்து 12,000 யுவான் சேமித்து 24 ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவியுள்ளனர்.

ஓய்வுக்கு பேருந்தை நிறுத்துக்கள் வேலையை உடலின் முழு ஒத்துழைப்புடன் செய்வதற்கு உடல் நிலை சீராக இருப்பது மிக முக்கியம். நல்ல ஓய்வு ஈடுபாட்டுடன் உழைப்பதற்கான சூழ்நிலையை கொடுக்கும். குறிப்பாக வாகனம் ஓட்டுனர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் இன்றியமையாதது. சரியான ஓய்வில்லாமல் வாகனம் ஓட்டுவதை தொடர்ந்தால் விபத்துகள் தான் மிஞ்சும். களைப்பான வாகன ஓட்டுனர்கள் குறிப்பாக நெடுந்தொலைவு பேருந்து ஓட்டுனர்களால் உருவாக்கப்படும் விபத்துகளை தவிர்க்க Chongqing மாநகராட்சி காவல்துறையால் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வசந்தவிழா விடுமுறையின்போது, சாலை விதிகளுக்கு கீழ்படிந்து, பாதுகாப்பில் கவனம் செலுத்த ஓட்டுனர்களுக்கு குறுந்தகவல் மூலம் நினைவுட்டல் அனுப்ப அது திட்டமிடப்பட்டுள்ளது. சில இடங்களில் நெடுந்தொலைவு ஓட்டுனர்களுக்காக ஓய்வு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இம்முயற்சி பாராட்ட படவேண்டியதென்றல்வா? எதிர்காலத்தில் பேருந்து ஓட்டுனர்களோடு சேர்ந்து பயணியரும் ஓய்வெடுக்க செல்லமல் இருந்தால் சரி.

1 2 3
|