இறந்தும் வாழும் மனிதன் இறந்தபின் நம்மைப்பற்றிய நிகழ்ச்சிகள் எது நடந்தாலும் நமக்கு தெரியாது தானே. ஆனால் வாழ்ந்து கொண்டிருப்பவரை இறந்ததாக கொண்டால் என்ன நடக்கும். இந்த அனுபவத்தை போலந்து நாட்டில் உள்ள ஒருவர் பெற்றுள்ளார். போல்கோவிஸ் நகரை சேர்ந்த 38 வயதான பியேற்ர் கூசி என்பவர் இத்தகைய அனுபவம் பெற்று துன்பப்பட்டு கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக அதிகாரிகளால் தவறுதலாக கூறப்பட்டு அவருக்கு இறுதி மாரியாதையும் அளிக்கப் பட்டது. தற்போது அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்ட பிறகும் அரசு பதிவேடுகளில் எல்லாம் அவர் இறந்ததாகவே பதிவுசெய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் வேலை செய்ய முடியாமல், சமூக காப்புறுதி செலுத்த முடியாத நிலைமையில் துன்பப்படுகிறார். அவர் இனிமேல் வரி சேலுத்த தேவையில்லை என்பது அவருக்கு கிடைக்க பெற்ற நல்ல செய்தியாக உள்ளுர் செய்திதாள் அறிக்கை வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது.
1 2 3
|