சீன மொழி பேசும் பறவைகள் சீன மொழி உலகிலேயே மிகவும் கடினம். அதனை கற்பது பெரும்சாதனை என்றும் கற்றபின்னர் எழுதுவது அதை விட பெரிய சாதனை எனவும் செல்லிக்கொண்டிருக்கிறோம் தானே. சீன மொழியை பறவைகளே பேசுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? Yunnan மாநிலத்தில் Zhaotong நகரில் பறவைகள் பேசுகின்றன. Yang Shaorong வளர்க்கின்ற இரண்டு மைனா குருவிகள் 100 சீன சொற்றெடர்களுக்கு மேல் பேசுகின்றன. ஒரு முறை Yang யின் மனைவி வீட்டிற்கு திரும்பியபோது Yang வேலைக்கு சென்றுள்ளார் ஒரு மைனா கூறியுள்ளது என்றால் பாருங்களேன். இந்த குருவிகள் உள்ளுர் நகர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு சிலர் அவைகளை 3,000 யுவான் கொடுத்து வாங்கவும் முயன்றுள்ளனர். மைனாக்களை விற்பதற்கு Yang மறுத்துவிட்டார். காக்கா கூட்டத்தை பார்த்து ஒற்றுமையா இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது போல சீன மொழி பயில இந்த மைனாக்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் போலும்.

பலூனில் பறக்கவிடப்பட்ட கடிதம் மீன் வாயில் கண்டுபிடிப்பு 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பான் சிறுமி எழுதி பலூனில் கட்டி பறக்கவிடப்பட்ட கடிதம் பசுபிக் பெருங்கடலில் 3,300 அடி ஆழத்திலிருந்து பிடிக்கப்பட்ட மீனிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பெரிய மீனின் வாயில் பலூன் துண்டை பார்த்த மீன்பிடித்தவர் அதனை எடுத்தார். அதனை பிரித்தபோது 6 வயதான நாட்சுமி ஸிராஹிஜ் என்ற சிறுமி கவாசாகி என்ற இடத்திலுள்ள தொடக்கப்பள்ளியிலிருந்து பறக்கவிட்ட கடித்தை பார்த்தார். 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சொஸி துறைமுகப்பகுதியில் பிடிக்கப்பட்ட மீனிடமிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு பள்ளியின் 120 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இக்கடிதம் பலூனில் கட்டி பறக்கவிடப்பட்டது. அதனை கண்டெடுப்போர் அப்பள்ளியின் முகவரிக்கு தொடர்புகொள்ள அதில் கோரப்பட்டிருந்தது. தற்போது 21 வயதாகி பல்கலைக்கழக மாணவியாக இருக்கும் நாட்சுமி ஸிராஹிஜ்க்கு 15 ஆண்டுகள் இக்கடிதம் அழியாமல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 2 3
|