• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-19 15:24:59    
phosphorite வளம்

cri


மூலவளத்தின் முழுமையான பயன்பாட்டை நிறைவேற்றுவது எமது கனவாகும். அதாவது, உற்பத்தி செய்வதில் கழிவுப் பொருள், கழிவு நீர், கழிவு வாயு எதுவும் வீணாக்கப்படாது என்றார் அவர்.
ஆழ்ந்த ஆய்வுக்கு பின், ஒரு தொகுதி புதிய தொழில் நுட்பக் கனிகளைப் பயன்படுத்தியதால், முன்பு உற்பத்தி போக்கில் வெளியேறிய கழிவுப் பொருள், கழிவு நீர், கழிவு வாயு ஆகியவை நல்ல சந்தை நம்பிக்கை கொண்ட புதிய உற்பத்தி பொருளாக மாறியுள்ளன. இவை கூட்டு நிறுவனத்துக்கு பல கோடி யுவான் லாபத்தைக் கொண்டு வரலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், கூட்டு நிறுவனங்கள் அதிக லாபமும் பெறுகின்றன.
சீனாவின் Phosphorite வளம் உலகில் 3வது இடம் வகிக்கின்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அளவுக்கு மீறிய அகழ்வினால், இதன் மூலவளம் பற்றாக்குறை விளிம்பில் சிக்கியுள்ளது. He hao ming கூறியதாவது 


 வளமிக்க மூலவளம் இருப்பதினால், இதனை வீணாக்கி, அளவுக்கு மீறி அகழ்வு செய்வதற்கான சாக்குபோக்கு கொள்ள கூடாது. நாடு, சமூகம், எதிர்கால தலைமுறையினர் ஆகியோரின் பொறுப்பற்ற செயல் இதுவாகும் என்றார் அவர்.


Hong fu கூட்டு நிறுவனம் சீனாவில் மிகப் பெரிய Phosphorite வளம் கொண்டுள்ளது. தொழில் துறை சேமிப்பு அளவு 60 கோடி டன்னை நெருங்கியது. ஆனால் அதன் தரம் குறைவு. இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள் Phosphorite வளத்தை புதிய முறையில் தேர்ந்தெடுக்கும் தொழில் நுட்பத்தை ஆராயந்தனர். இதனால் பெரும் அளவிலான தரம் குறைந்த Phosphorite தாது வளம் பயன்படுத்தப்பட முடியும். தாது வளத்தின் அகழ்வு காலவரம்பு முன்பு இருந்த 80 ஆண்டுகளிலிருந்து தற்போதைய 100 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
தற்போது, Hong fu கூட்டு நிறுவனம், தொழில் நுட்ப மேம்பாட்டை கொண்டுள்ளது. சீன Phosphorite தொழில் மூலவளத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டு துறையின் ஆய்வுக்கு இது பங்கு ஆற்றியுள்ளது.
1 2 3