• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-27 08:57:42    
Yoga பயிற்சியாளர் Prince

cri
"என் பெயர் WANG ZI, yoga பயிற்சியாளராக இருக்கின்றேன். HE FEI நகரத்தை விரும்புகின்றேன்" என்று Prince கூறினார்.
இந்திய இளைஞர் Prince, அவரது ஆங்கில பெயரின் பொருள் இளவரசர் என்பதாகும். அவர் நல்ல வெளித்தோற்றம் கொண்டவர். தற்போது, சீனாவின் ஆன் ஹுய் மாநிலத்தின் தலைநகர் HE FEIயிலுள்ள உடற்பயிற்சி மன்றம் ஒன்றில் yoga கற்றுக் கொடுக்கிறார். அவர் சீனாவில் ஓராண்டுக்கு மேல் வாழ்ந்து வருகிறார். அன்புள்ள நேயர்களே, இன்றைய நிகழ்ச்சியில், HE FEI நகரில் இந்த yoga இளவரசரின் எளிமை மற்றும் இன்பமான வாழ்க்கை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன். அறிவிப்பாளர் வான்மதி.


5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பழமை வாய்ந்த இந்தியாவில், புத்த மதப் பெரியார்கள் நீண்டகாலமாக கன்னிக்காடுகளில் தங்கி, தியானம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை நிறைந்த எளிதான வாழ்க்கை நடத்திய பின், உயிர் இனங்களைப் பார்த்து ஆய்வு செய்வதில் இயற்கை ஒழுங்கு முறைகள் பலவற்றை கண்டறிந்தனர். உடல் நலத்தைப் பேணிக்காத்து சரிப்படுத்துவதன் மூலம், நோய், காயம் மற்றும் வலிக்கு சிகிச்சை வழங்கும் திறனை அவர்கள் கண்டுபிடித்தனர். சில ஆயிரம் ஆண்டுகால ஆராய்ச்சி மூலம், முழுமையான தத்துவம் கொண்ட, உடல் நலத்துக்கு பயன் தரக் கூடிய உடற்பயிற்சி முறைமை படிப்படியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் yoga.
கடந்த சில ஆண்டுகளில், உலகின் பல்வேறு இடங்களில் yoga மீதான பேரார்வம் நிறைந்து காணப்படுகிறது. சீனாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. Yoga கற்றுக் கொடுக்கும் குடும்பத்தில் பிறந்த இந்திய இளைஞர் Prince, அழைப்பை ஏற்று, HE FEI நகரிலுள்ள ஒரு உடற்பயிற்சி மன்றத்தில் yoga பயிற்சியாளராக வேலை செய்கிறார்.

"எனது குழந்தை பருவத்தில், தாத்தா yogaவை கற்றுக் கொடுத்த போது, நான் அவருடன் இருப்பேன். இந்திய yoga ஆய்வகத்தை தாத்தா துவக்கினார். அவர் காலமானார். நான் 14 வயதில் yoga கற்றுக் கொள்ளத் துவங்கினேன். பல்கலைக்கழகத்தில் வணிக இயலைப் படித்தேன். ஆனால், yoga மீதான ஆர்வத்தை நான் எப்போதும் கைவிடவில்லை" என்றார் அவர்.
1 2 3