• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-27 08:57:42    
Yoga பயிற்சியாளர் Prince

cri

சீனாவிலான வாழ்க்கைக்கு பழகிக் கொள்வது, HE FEI வந்தடைந்த Prince சந்திக்க வேண்டிய முதலாவது பிரச்சினை. ஆனால், அவரைப் பொறுத்த வரை, இது அவ்வளவு கடினமாக இல்லை. ஏனென்றால், அவரது பக்கத்தில், அவருக்கு உதவ விரும்பும் அயலவர், சக பணியாளர், மொழிபெயர்ப்பாளர் ஆகியோர் இருக்கின்றனர். பெண் அயலவர் ஒருவர் பற்றி Prince சிறப்பாக குறிப்பிட்டார். வாழ்க்கை இன்னலில் சிக்கிய போது அல்லது நோய்வாய்ப்பட்ட போது, இந்த அயலவர் கனிவான மனதுடன் உதவிக்கரம் நீட்டுகிறார் என்று அவர் கூறினார்.


"அவர் மிகச் சிறந்த அயலவர் ஆவார். அவர் ஒரு தாய் போல், உணவு சாப்பிடாமல் இருந்த போது அல்லது நோயால் பீடிக்கப்பட்ட போது, என்னை பராமரிக்கிறார். குடும்பத்தினர் போல் என்னுடன் பழகுகிறார். சீன மக்கள் அனைவரும் அவரைப் போன்றே, கனிவான மனம் கொண்டவர்கள் என நம்புகின்றேன்" என்றார் அவர்.
Princeஇன் கூற்றிலிருந்து, HE FEI நகரையும் HE FEI மக்களையும் அவர் மிகவும் விரும்புகிறார் என்பதை உணரலாம். 
"HE FEI மக்களை நேசிக்கின்றேன். எனது மாணவர் மட்டுமல்ல, இங்குள்ள அனைவரும் நல்லவர்கள் ஆவர்" என்றார் Prince.
Prince கையொப்பமிட்ட ஒப்பந்தம் 2008ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவடையும். எதிர்காலத்தில் வாய்ப்பு இருந்தால், தாம் தொடர்ந்து சீனாவில் தங்கியிருக்கப் போவதாகவும், yoga பயிற்சியாளரான தமது நண்பர்களை சீனாவுக்கு வர அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
1 2 3