23 வயதான Prince, இந்தியாவில் தேசிய அளவிலான 4 yoga போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். சீனாவுக்கு வருவதற்கு முன்பாக, இந்தியாவில் yoga பயிற்சியாளராக அவர் வேலை செய்தார். Yoga எழுச்சியை உலகின் பல்வேறு இடங்களில் பரவலாக்குவது என்பது, அவரது கனவாகும். ஓராண்டுக்கு முன், சீனாவின் பெய்ஜிங் மற்றும் HE FEI நகரிலிருந்து வந்த 2 அழைப்பு கடிதங்கள் Princeக்கு கிடைத்தன. HE FEI நகரில் Princeஇன் நண்பர் Sony, yoga மன்றம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை செய்தார். அவர் Princeக்கு உதவியாக இருப்பார் என்று Princeஇன் தாய்தந்தையர் கருதுகிறார்கள். எனவே, பெற்றோரின் யோசனைக்கு இணங்க, HE FEI நகரிலுள்ள அந்த மன்றத்துக்கு Prince வந்தார்.

"வெளிநாட்டுக்குச் செல்லும் நீ, உன்னை மட்டுமல்ல, இந்தியா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறாய். ஆகவே இந்தியாவின் நற்பெயரைப் பாதிக்கும் செயல் ஏதும் செய்யக் கூடாது. தவிரவும், yoga கற்றுக் கொடுப்பது, yogaவை உடற்பயிற்சி முறையாக பிறருக்கு கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக yogaவின் தூய்மையான சிந்தனை நிலையை மற்றவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என தந்தையார் கூறினார்" என்றார் அவர். மேலும் உயர் நிலையை அடையும் பொருட்டு, அவரது நண்பர் Sony மேற்படிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பினார். இதனால் அந்த yoga மன்றத்தில் ஒரேயொரு பயிற்சியாளர்—Prince மட்டுமே இருக்கிறார். பணிச்சுமை அதிகரித்த போதிலும், அவர் ஒருபோதும் குறை கூறவில்லை. இம்மன்றத்தின் பொது மேலாளர் YE PING அம்மையார் Prince பற்றி குறிப்பிடுகையில் பாராட்டு தெரிவித்தார். "எளிமையும் நேர்மையும் கொண்ட இளைஞராகவும், மன உறுதி மிக்கவராகவும் அவர் இருக்கிறார். உணர்வுப்பூர்வமாக வேலை செய்யும் அவர், ஒருபோதும் தாமதமாகாமல் வருகிறார்" என்றார் அவர். Princeஇன் மொழிபெயர்ப்பாளர் GAO RUI FENG அம்மையார் பேசுகையில், Prince போன்ற yoga பயிற்சியாளரின் வாழ்க்கை, எதிர்பார்ப்பை விட மிகவும் எளிமையாக உள்ளது என்றும் கூறினார். அன்றாட வாழ்க்கையில், எளிதாக பழகக் கூடிய Prince, மனதில் உற்சாகம் நிறைந்த, ஆண் குழந்தை போல் காணப்படுகிறார். ஆனால், வகுப்பில் அவர் ஒரு கண்டிப்பான ஆசிரியராக இருக்கிறார். GAO RUI YING அம்மையார் எமது செய்தியாளரிடம் கூறியதாவது—

"நான் ஆசிரியர். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான உறவு, தந்தையாருக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் போல் இருக்கிறது. தந்தையார் மகனுக்கு கண்டிப்பான கோரிக்கையை விடுக்க வேண்டும். மாணவர்கள் என்னை தங்களது தந்தையாக கருத வேண்டும் என அவர் அடிக்கடி கூறுகிறார். வகுப்பில், தந்தையார் என்ற முறையில், அவர் அனைத்து பிள்ளைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்" என்றார் அவர். Princeஇன் கருத்தில், வகுப்பறை, மிக புனிதமான இடமாகும். 1 2 3
|