கலை...... இப்போது சீனாவில் 11வது சீனத் தேசிய பேரவையின் முதலாவது கூட்டத் தொடரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத் தொடரும் நடைபெற்று வருகின்றன. தமிழன்பன்........கடந்த சில நாட்களில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளில் சொய்தித் தொகுப்பு, இவ்விரண்டு கூட்டத் தொடர்களின் சொற்கள் பற்றிய விளக்கம் நேயர்களின் கருத்துக்கள் ஆகியவை ஒலிப்பரப்பப்படுகின்றன. கலை.......ஆமாம். இதனால் நல்ல பயன் பெறப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக கூட்டத் தொடர்களில் கலந்து கொண்டுள்ள சாதாரண பிரதிநிதிகளின் கருத்துக்களை எடுத்து கூறுகின்றோம். தமிழன்பன்.......நல்ல யோசனை. ஏன்னென்றால் சாதாரண பிரதிநிதிகளே ஒவ்வொருவரின் எண்ணங்கள் என்ன என்பதை நேயர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு குறைவு. கலை......ஆமாம். ஆகவே கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் அவர்களின் கருத்துக்களை தெரிவிப்பது இன்றைய நிகழ்ச்சியின் நோக்கமாகும். தமிழன்பன்......நல்லது. முதலில் யாருடைய கருத்தை நேயர்களுக்கு அறியச் செய்ய இருக்கின்றோம். கலை.......முதலில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டில் கலந்து கொள்கின்ற சிங்கியாங் உய் கூர் தன்னாட்சி பிரதேசத்தின் ஊனமுற்றோர் சம்மேளனத்தின் துணை இயக்குனர் ஹு ச்சு பின் அங்குள்ள ஊனமுற்றோரை பாதுக்காக்கும் இலட்சியத்தை குறிப்பிட்டதை பார்க்கின்றோம். தமிழன்பன்.......இத்துறை கடந்த 5 ஆண்டுகளில் விரைவாக வளர்ந்ததால் மாபெரும் சாதனைகள் பெறப்பட்டுள்ளன. கலை....... சாதனைகளுக்கு முன்னர் அவருடைய கூற்றை கேளுங்கள்.
தமிழன்பன்..........கடந்த 5 ஆண்டுகளில் சிங்கியாங்கின் பல்வேறு நிலை கட்சி மற்றும் நிர்வாக வாரியங்களின் ஆதரவுடன் அங்குள்ள ஊனமுற்றோர் பாதுகாப்புத் துறை பெரும் சாதனைகளை பெற்றுள்ளது. குணமளிப்பு துறையை பார்த்தால் கண்புறை நோய் சிகிச்சை, காது கேளாதவரின் செவி திறன் மீட்பு, தொழுநோய், செயற்கை உடல் பொருத்தல் முதலிய சிகிச்சைகளில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான ஊனமுற்றோர் பயன் பெற்றுள்ளனர். கண்புறை நோய் சிகிச்சை செய்யப்பட்ட பின் பல நோயாளிகளின் கண்பார்வை மீட்கப்பட்டுள்ளது. கேட்கும் கருவி பொருத்தப்பட்ட பின் செவிகேளாதவர் பிறரின் குரலை கேட்க முடிகிறது. மற்றவருடன் அவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடிகிறது என்று அவர் கூறினார். 1 2 3
|