தமிழன்பன்.........அவர் எந்த வகை கருதுருவை கூட்டத் தொடரில் வழங்க இருக்கிறார்.
கலை.......சிங்கியாங் உய் கூர் தன்னாட்சி பிரதேசத்தில் வாழ்கின்ற சிப்போ இனத்தை சேர்நத பிரதிநிதியான நான் தேசிய மக்கள் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். சிப்போ இனத்தின் மொழி, எழுத்துக்கள் ஆகியவற்றை பாதுகாப்பது பற்றிய கருத்துருவை இக்கூட்டத்தில் வழங்க வந்திருக்கின்றேன். இந்த மொழி பாதுகாப்பது ஏன். மத்திய மக்கள் பல்கலைக்கழகத்தில் பயின்ற சிப்போ மாணவர்கள் ஒருவரும் ஈலிக்கு திரும்ப வில்லை. பொருட்காட்சி, பதிவேட்டு அருங்காட்சியகம் ஆகியவற்றில் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை தேசிய இனங்களின் வரலாற்றை ஆராயும் போது மென், சிப்போ மொழிகள் தேவைபடுகின்றன. ஆகவே சிப்போ மொழி மற்றும் எழுத்துக்களை பாதுகாத்து வளர்ப்பது தேசத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது சீன தேசத்தின் பண்பாட்டை ஆராய்வதற்கும் உலக அளவிலும் செல்வாக்கை ஏற்படுத்தும். தமிழன்பன்..........சிறுபான்மை தேசிய இன மொழிகளை பாதுகாப்பதில் சீன நடுவண் அரசு பல முயற்சிகள எடுத்து பல வழிமுறைகளை வழங்கியுள்ளது நாமறிந்ததே. எனவே கூட்டத் தொடரில் ஏற்றுக் கொள்வதில் ஐயமில்லை என்றே நம்புகின்றோம்.
கலை......சரி நேயர்களே இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் முக்கியமான மூன்று பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிமுகபடுத்தினோம். 1 2 3
|