• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-12 22:39:56    
சுற்றுச் சூழல் பாதுகாப்பிலான சீன மக்களின் முயற்சி

cri
கலை.........அன்பான நேயர்களே வணக்கம்.

தமிழன்பன்........வணக்கம் அன்பான நேயர்களே.

கலை.........இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

தமிழன்பன்........உங்களுக்கு சேவை புரிவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. கலை சென்ற நிகழ்ச்சியில் சீன இருப்புப் பாதை கட்டுமான வரலாறு பற்றி பொதுவாக விவாதித்தோம்.

கலை.........ஆமாம். அதனை நேயர்கள் கேட்ட பின் தெரிவித்த கருத்துக்களை பார்த்தால் பயன் மிக்கதாக இருந்தது தெரிய வருகிறது.

தமிழன்பன்........கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் நண்பர்கள் முன்வைத்த வினாக்களுக்கு விடை அளித்த பின் நல்ல பயன் இருப்பதால் இந்நிகழ்ச்சி சரியான வளர்ச்சியின் பாதையில் தான் உள்ளது என்பது தெரியவருகின்றது.

கலை.........ஆமாம். நாம் மேலும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்துவதுவதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

தமிழன்பன்........இன்றைய நிகழ்ச்சியில் தற்போது உலக மக்கள் கவனம் செலுத்திவரும் சுற்றுச் சூழல் பாதுகாப்பை சீன மக்கள் எப்படி கையாள்கின்றனர் என்பது பற்றி நாம் விவாகிக்கலாமா.

கலை.........கண்டிப்பாக. அது பற்றி விவாதிக்கும் அதேவேளையில் காளியப்பம் பாளையம் க. ராகம் பழனியப்பன் இதையொட்டி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புகின்றோம்.

தமிழன்பன்........நவீன சமூகத்தின் அறிவியல் முன்னேற்றத்துடன் மக்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையை எப்படி தீர்க்க வேண்டும் என்பதில் மென்மேலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கலை.........பன்னாடுகளில் உள்ள மக்களை போல சீன மக்களும் இதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளனர்.

தமிழன்பன்........குறிப்பாக அன்றாட வாழ்க்கையில் பொருட்களை வாங்கும் போது பயன்படுத்துகின்ற நெகிழி பை தொடக்கத்தில் மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

கலை.........ஆனால் அது அளவுக்கு மீறி பயன்படுத்தப்பட்டவுடன் சமூகத்தில் மாபெரும் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.

தமிழன்பன்........ பயன்படுத்திய பின் மண்ணோடு மக்கிப் போக நீண்ட காலம் தேவைப்படுகின்றது.

கலை.........சில சமயங்களில் அவற்றை தரையில் புதைத்து விட்டால் சில ஆண்டுகளுக்கு பின்னரும் அதே போல பையாக அழியாத நிலையில்தான் இருக்கும்.

தமிழன்பன்........இது மக்களின் வாழ்க்கை சூழலில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய கடுமையான பிரச்சினையாகியுள்ளது.

கலை......... அத்தகைய நெகிழி பைகளுக்கு பதிலாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு தன்மை மிக்க பைகள் பயன்படுத்த இப்போது சீனாவின் பேரங்காடிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

1 2 3