• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-12 22:39:56    
சுற்றுச் சூழல் பாதுகாப்பிலான சீன மக்களின் முயற்சி

cri

கலை.........கண்டிப்பாக சிறப்பாக இருந்தது. பிரச்சாரம் செய்யப்பட்ட 2 திங்களில் ஒவ்வொரு பேரங்காடியிலும் ஒரு நாளுக்கு குறைந்தது 20 பைக்கள் விற்பனை செய்யப்பட்டன.

தமிழன்பன்........அது சரி அத்தகைய பை பொதுவாக எவ்வளவு எடையை தாங்கும்?

கலை.........5 கிலோகிராம் வரை எடை உள்ள பொருட்களை தாங்கி கொள்ளும்.

தமிழன்பன்........அதை பொருட்களை வாங்கும் போது பயன்படுத்தலாம். சாலையில் பயணம் செய்யும் போது முதுகில் சுமந்தும் செல்லலாம்.

கலை.......ஆகவே பொருட்களை வாங்கிய பின் எடுத்து கொடுக்கும் பயன் மட்டுமல்ல நமது வாழ்க்கையையே செழுமைபடுத்தும் பயனையும் கொண்டுள்ள இந்த பைகளை மக்கள் வாங்க முயற்சித்துள்ளனர்.

தமிழன்பன்........மக்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பையின் பயன்பாட்டை பிரச்சாரம் செய்யும் போது பல்வகை வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளனர்.

கலை.........ஆமாம். உலகில் 500 வலிமைமிக்க தொழில் நிறுவனணங்களிலுள்ள ஓர்மாட் குழுமம் இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சியில் பங்கு கொண்டுள்ளது.

தமிழன்பன்........புதிய கிளை கடை திறக்கபப்டும் தொடக்க வாரத்தில் கட்டணம் செலுத்திய முத்திரையை ஒரு நாளில் மூன்று முறை ஓட்டினால் அந்த மூன்று முத்திரைகளும் ஒட்டப்பட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு பையை பேரங்காடி பணியாளரிடம் காட்டினால் சிறிய அன்பளிப் பு பொருடை இலவசமாக பெறலாம்.

கலை.........ஆகவே வாடிக்கைகாளர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு தங்களது உற்சாகத்தை காட்டியுள்ளனர்.

தமிழன்பன்........இந்த விகிதத்தை கணக்கிட்டு பார்த்தால் நாளுக்கு ஆயிரம் பேர் இந்த நெகிழிப் பொருட்களை மாற்றினால் வாரத்துக்கு குறைந்தது 21 ஆயிரம் நெகிழி பைகள் பயன்பாடு குறையும். எனவே தயாரிப்பு குறையும்.

கலை.........சுற்றுச் சூழல் பாதுகாப்பு பை பேரங்காடிகளில் பரவலாக்கப்பட்டதுடன் பல வணிகர்கள் அவர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் போது தங்கள் நிறுவன சுற்றுச் சூழல் பாதுகாப்பு பைகளையும் விளம்பரம் செய்ய துவங்கியுள்ளனர்.

தமிழன்பன்........சீனாவின் யின் தேய் என்னும் அங்காடியில் பேஷன் ஆடைகளை நவீன அலங்கார ஆடை விற்பனை கடைக்காரர்கள் அவர்களது கடையின் அல்லது ஆடைகளின் விளம்பரங்கள் கொண்ட தனிச்சிறப்பியல்பு மிபு பைகளை வழங்குகின்றனர்.

கலை.........இந்த முயற்சி மகளிரால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளது.

தமிழன்பன்........ நவீன பாணியிலான ரொட்டி கடைகளிலும் இதே மாதிரியான பைதான் வழங்கப்படுகின்றது. ரொட்டிகளை வாங்கும் போது கொடுக்கப்படும் பை வாடிக்கையாளர்கள் பின்னர் பலவற்றிற்கு பயன்படுத்த வாய்ப்பாகின்றது.

கலை.........மக்கள் இந்த பையை பெறுவதற்காகவே அடிக்கடி ரொட்டி கடைகளுக்கு போய் பொருட்கள் வாங்குகிறார்கள். ரொட்டி வியாபார கடையின் வருவாயும் அதிகரித்துள்ளது.

தமிழன்பன்........ஆகவே வியாபாரம் செய்யும் கடைகாரர்கள் சமூகத்தின் முன்னேற்றத்தை தாமதமின்றி இனம் கண்டு பிடித்து மக்களின் அலுவலுடன் இணைந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டால் வியாபாரம் பெருகி நன்மை விளையும்.

கலை.........இது சமூகத்தின் ஒவ்வொரு முயற்சியும் மனித குலத்துடன் இணைக்கப்படுவதை காட்டுகின்றது. நாம் மாபெரும் அர்பணத்தை காட்டினால் மக்கள் நமக்கு பதிலாக அதிக நன்மைகளை தருவார்கள். அல்லவா?

தமிழன்பன்.......ஆமாம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சியில் இத்தாலியில் வீட்டு சான்மாங்களை விற்பனை செய்யும் புகழ் பெற்ற யிக்கியா குழுமம் சீனாவின் முக்கிய மாநகரங்களில் வியாபாரம் செய்து வருகிறது. அதன் ஒவ்வொரு கடைகளும் சீன மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

கலை.........இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சியில் யிக்கியா பேரங்காடி பங்கு எடுத்துள்ளது.

தமிழன்பன்........குவாஞ் சோ நகரிலுள்ள இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் யிக்கியா பேரங்காடி அதன் இரண்டு ஆண்டு நினைவு நடவடிக்கையை கொண்டாடும் போது வீட்டு சாமான்களை வாங்கும் போது பயன்படுத்த வேண்டிய நெகிழி பைகளை விலைக்கு வழங்க உள்ளது.

கலை.........ஆகவே மக்கள் இனிமேல் யீச்சியா பேரங்காடிக்கு செல்லும் போது சேமித்து வைத்திருக்கும் அலவ்லது பயன்படுத்திய நெகிழி பைகளை கொண்டு கடைக்கு போனால் நெகிழி பை வாங்க தேவையில்லை.

தமிழன்பன்........இவ்வாறு நெகிழி பைகளின் பயன்பாட்டை குறைப்பது சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு நன்மை தரும்.

கலை......... யிக்கியா பேரங்காடி நெகிழி பைகளை விற்பனை செய்வதன் மூலம் பெறும் இலாபத்தை வாடிக்கைகாளர்களுக்கு சேவை புரிவதில் பயன்படுத்தும் என்று யிக்கியா குழுமத்தின் பொறுப்பாளர் ஒருவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழன்பன்........இவ்வாறு சீனாவின் பல்வேறு கடைகளில் நெகிழி பை பயன்பாடு தடுப்பு விரைவில் பரவலாக்கப்படவுள்ளது.

கலை.........இந்த முயற்சி வெற்றிகரமாக எல்லா மக்கள் மத்தியிலும் பரவலாக்கப்பட்டால் சீனாவின் சுற்றுசூழல் நிலைமை மேலும் சிறப்பாகும் என்பதில் ஐயமேயில்லை என்று நம்பிக்கையுடன் கூறுகின்றோம்.

தமிழன்பன்........நண்பர்களே. கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவு பெறும் நேரம் ஆகிவிட்டது.

கலை.........நிகழ்ச்சியை கேட்டு அது பற்றிய கருத்து தெரிவிப்பதை மிக வரவேற்கிறோம்.

தமிழன்பன்........அடுத்த வாரம் சனிக்கிழமையில் மீண்டும் சந்திப்போம்.

கலை.........வணக்கம் நண்பர்களே.


1 2 3