• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-12 22:39:56    
சுற்றுச் சூழல் பாதுகாப்பிலான சீன மக்களின் முயற்சி

cri

தமிழன்பன்........ஓராண்டு சோதனை காலத்துக்கு பின் இப்போது பல்வகை பேரங்காடிகளில் பரவலாக்கப்பட்டுள்ளது.

கலை.........ஆமாம். மாநகரங்களிலும் பேரங்காடிகளிலும் வெளிநாட்டு முதலீட்டுடன் கூடிய கேரெ போஃ, யிக்கியா, ஓல்மா போன்ற பேரங்காடிகளிலும் இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழன்பன்........சரி கலை நாம் இவ்வாறு பொதுவாக கூறினால் அதனை நம்புகின்ற அளவு குறைவாகத்தான் இருக்கும்.

கலை.........ஆமாம். பல உதாரணங்களை எடுத்து கூறி விளக்கினால் இதன் பயன் மேலும் அதிகரிக்கும்.

தமிழன்பன்........இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சியில் சீனாவின் செச்சியான் மாநிலத்தின் தலைநகரான ஹாஞ்சோ நகரில் 2007ம் ஆண்டு ஜுலை திங்களிலிருந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலை.........ஹாஞ்சோவிலுள்ள பல்வகை பேரங்காடிகளில் "நான் நெகிழி பை அல்ல" என்ற ஆங்கில மொழி வாக்கியம் அச்சடிக்கப்பட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு தன்மை மிக்க பை மக்களிடையில் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழன்பன்........அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளதும் பை தானே அந்த பை எதனால் தயாரிக்கப்பட்டது?

கலை.........அது பருத்தி கயிறால் பின்னப்பட்ட நிறமற்ற பையாகும். நிறமற்ற பையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் "நான் நெகிழி பை அல்ல" என்ற வாக்கியம் எழுதப்பட்டுள்ளது. அதன் விற்பனை விலை 120 யுவான்.

தமிழன்பன்........விலை கொஞ்சம் அதிகமல்லவா?

கலை.........இருந்தாலும் அதன் உற்பத்தி பொருள், வடிவம், நிறம் ஆகியவை இளஞர்களின் நுகர்வு எண்ணத்திற்கு பொருந்தியுள்ளதுபட்ட நாள் மதியம் 1 மணிக்குள் மட்டுமே 20 ஆயிரம் பைகள் விற்பனை செய்யப்பட்டன என்றால் பாருங்களேன்.

தமிழன்பன்........இப்போது ஹாஞ்சோ மற்றும் பெய்ஜிங் நகரங்களில் சாதாரண மக்கள் மட்டுமல்ல புகழ் பெற்ற நடகர்கள் நடிகைகள் ஊழியர்கள் ஆகியோரும் இத்தகைய பையை தான் பயன்படுத்துகிறார்கள்.

கலை.........ஹாஞ்சோ நகரில் உள்ளூர் தனிச்சிறப்பியல்பு மிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பபான பொருட்கள் வாங்கும் பை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழன்பன்......அப்படியா? அதன் விளைவு எப்படியிருந்தது?

1 2 3