• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 02:17:26    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஆ

cri
A:துவக்க விழாவின் கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றம் உச்ச நிலையை அடைந்த போது, இரு விண்வெளி வீரர்கள் வானத்திலிருந்து கிழே தரைக்கு வந்தார்கள். அத்துடன், மாபெரும் பூவுலக உருண்டை ஒன்று தேசிய விளையாட்டரங்கான பறவைக் கூட்டின் தரைப்பகுதியிலிருந்து தோன்றியது.

B: 18 மீட்டர் விட்டமும் 16 டன் எடையும் கொண்ட மாபெரும் இந்தப் பூவுலக உருண்டையை 9 மின்னும் கோடுகள் பிரித்து காட்டியன. கோடுகள் வட்டங்கள் போல் மின்னின. 58 நடிகர்கள் இந்த உலக உருண்டையில் நடந்து உலாவந்தனர். ஒரே பூவுலகத்தை நாம் கொள்கின்றோம் என்பதை இது வெளிப்படுத்தியது.

A:2003ம் ஆண்டில், சென்செள 5 எனும் சீனாவின் முதலாவது மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. யாங் லி வெய் விண்வெளியில் இருந்தபடி மனித குலத்திற்கு வணக்கத்தைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

B: விண்வெளியிலான பணியாளர்கள், தாய்நாட்டு மக்கள், ஹாங்காங், மகௌ மற்றும் தைவான் உடன்பிறப்புகள், வெளிநாடுகளில் வாழ் சீனர்கள், அனைத்துலக மக்கள் ஆகியோருக்கு வணக்கம் என்றார் அவர்.

A:மிகப்பழமையான ஆழமான சீன நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. பத்து பண்ணிரண்டு நிமிட கலை நிகழ்ச்சி காட்சிகளில் உலக மக்களிடம் சீனாவின் பண்பாட்டை பன்முகங்களிலும் எடுத்துக்காட்ட முடியாது. ஆனால், சீன kung fuவை நாங்கள் வெளிப்படுத்துவது உறுதி.

B:இயற்கை என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியில், ஷௌ லின் kung Fu பள்ளியைச் சேர்ந்த 2008 மாணவர்கள் tai chi chuan பயிற்சியை மேற்கொண்டனர்.

A:சீனாவின் பாரம்பரிய பண்பாட்டின் உள்ளடக்கமான kung fu, முழு உலக மக்களுக்கு புகழ்மிக்க பண்பாட்டு அம்சங்களை வழங்கி வருகின்றது. தற்போது, பல ஹாலிவுட் திரைப்படங்களில் சீன kung fu கலையை காணலாம். இவ்வாண்டு, உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்த kung fu பாண்டா என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் kung fu பாண்டா ஆகிய இரு பெரும் சீனப் பண்பாட்டுச் சின்னங்கள் முழுமையாக ஒன்றிணைந்தன.

B:பண்பாட்டுப் பரிமாற்றம் என்பது இரு தரப்பு நடவடிக்கையாகும். உலகிடம் சீனப் பண்பாடு பரவுவதோடு, கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில், பல்வேறு நாடுகளின் பண்பாடுகள் சீனாவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவின் கலை நிகழ்ச்சிகளில், பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் தொடர் ஒன்று உள்ளது. சீனாவின் பண்டைக்காலத்தில், பட்டுப் பாதை, சிங் ஹெய் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றபோதான கடல் வழி பட்டுப் பாதை உள்ளிட்ட வெளிநாட்டுப் பரிமாற்றத்தின் புகழ் பெற்ற இரண்டு பாதைகளை இது மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

1 2 3