• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 02:17:26    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஆ

cri

B:

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவின் போதான கலைநிகழ்ச்சியின் இறுதியில், சீனாவில் புகழ் பெற்ற பாடகர் liuhuan, பிரிட்டனின் நட்சத்திர பாடகரான sarah brightman அம்மையார் இருவரும், நீயும் நானும் என்ற தலைப்பிலான பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தலைப்புப் பாடலை பாடினர். ஓர் உலகம், ஒரு கனவு என்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தலைப்பை, இந்த மகத்தான பாடல் முழுமையாக வெளிப்படுத்தியது.

A:

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தலைப்பு பாடல் பாடப்பட்ட போது, தேசிய விளையாட்டரங்கிலான சூழல் பேரெழுச்சி நிறைந்து காணப்பட்டது. 5 கண்டங்களைச் சேர்ந்த குழந்தைகளின் புன்னகை முகங்கள் கொண்ட குடையை 2008 தொண்டர்கள் விரித்து வைத்தனர். அதேவேளையில், 2008 குழந்தைகளின் புன்னகை வானவேடிக்கை மூலம், பறவைக் கூடு என்ற சீனாவின் தேசிய விளையாட்டரங்கின் மேல், வானத்தில் விடுவிக்கப்பட்டன. இது பற்றி, துவக்க விழாவின் தலைமை இயக்குநர் zhangyimou கூறியதாவது:

B:

குழந்தைகளின் புன்னகையை பார்க்கும் போது, பொது மக்கள் அனைவரும் மனமுருகுகின்றனர். நிறத்தால் வேறுபட்ட பலர் ஒன்று திரண்டதை காணும் போது, நமது உள்ளம் உற்சாகமடைகிறது. ஏனென்றால், மனித குலமான நாம் மிகவும் அருமையான எதிர்காலத்தை பெற விரும்புகின்றோம். எழில்மிக்க எதிர்காலம், உலகத்துக்கு உண்டு என்றார் அவர்.

A:

இறுதியில், உபசரிப்பு நாடான சீனாவின் ஒலிம்பிக் விளையாட்டுப் பிரதிநிதிக் குழு விளையாட்டரங்கில் நுழைந்த போது, அங்கிருந்த பொது மக்கள் அனைவரும் ஆரவாரமாக வரவேற்றனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனாவுக்கு தங்கப் பதக்கம் இல்லாத வரலாற்றை முறியடித்த சீனாவின் துப்பாக்கிச்சுடுதல் வீரர் xuhaifeng பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

B:

உலகில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள், பெய்ஜிங்குக்கு வந்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு, சிறந்த சாதனைகளைப் பெற வேண்டும். பெய்ஜிங், அவர்களது மனதில் ஆழமாக பதியும். தவிர, சீனாவின் விளையாட்டு வீரர்கள் தலைசிறந்த சாதனைகளைப் பெற நான் உளமார வாழ்த்துகிறேன் என்றார் அவர்.

A:

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் அமெரிக்காவின் பிரதிநிதிக் குழு மிகவும் வலிமையானது. வழக்கம் போல், இந்த முறையும், நாங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்தோம். மகளிருக்கான கால் பந்து, கூடைப்பந்து, தடகளம், நீச்சல், மென்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் நாங்கள் தேர்ச்சி பெற்றவர்கள். இந்த விளையாட்டுப் போட்டி அணியின் மீது நான் மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன் என்றார் அமெரிக்க பிரதிநிதிக் குழுவின் தலைவர் charles lee.

B:

467 விளையாட்டு வீரர்களை கொண்ட ரஷிய விளையாட்டு அணி, 23 விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும். பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியோடு, விளையாட்டுப் போட்டியின் மறுமலர்ச்சியை ரஷியா மீண்டும் தேட வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பதக்கப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ரஷிய விளையாட்டுப் பிரதிநிதிக் குழு இடம் பிடிக்க பாடுபடும் என்று ரஷிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஜஜோஃப் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

A:

சீனா மற்றும் அமெரிக்கா, எமது முக்கிய போட்டி நாடுகளாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிறந்த சாதனைகளைப் பெறும் வகையில், எமது விளையாட்டு வீரர்கள் உணர்வுப்பூர்வமான ஆயத்தப் பணியை மேற்கொண்டுள்ளனர் என்றார் அவர்.

B: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Rogge கூறியதைப் போன்று, விளையாட்டு, மக்களுக்கிடையிலான பரிமாற்றத்தின், பாலமாக, அனைத்து மக்களையும் அமைதியான, நல்லிணக்கக் கனவைக் கொள்ளச் செய்கிறது.

1 2 3