• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 02:17:26    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஆ

cri

A: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 205 உறுப்பு நாடுகள், தமது இனங்கள், பண்பாடு, மொழிகள், அரசியலமைப்பு முறை மற்றும் மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், இணக்கமாகப் பழகுகின்றன. இத்தகைய ஒற்றுமை, மனிதகுலத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார் அவர்.

B: அதிகமான விளையாட்டு வீரர்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வது மட்டுமல்ல, பல்வேறு நாடுகளின் 80க்கு மேற்பட்ட அரசியல் தலைவர்களும் துவக்க விழாவைக் கண்டுகளிக்க வருகை தந்தனர். ஒலிம்பிக் வரலாற்றில், இது வருகை தருவோரின் எண்ணிக்கையில், மிக அதிகமானதாகும். அமெரிக்க அரசுத் தலைவர் ஜார்ஜ்.W.புஷ், ஜப்பானிய தலைமையமைச்சர் Yasuo Fukuda, இஸ்ரேலிய அரசுத் தலைவர் Shimon Peres, கசகஸ்தான் அரசுத் தலைவர் நசர்பயேவ், ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் Kevin Rudd முதலியோர், பங்கேற்கும் அரசியல் தலைவர்களில் அடங்குகின்றனர்.

A: 88 வயதான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கெளரவத் தலைவர் Juan Antonio Samaranchஉம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவுக்கு வருகை தந்தார். அவர் கூறியதாவது,

B: 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வது, என்னை மகிழ்ச்சியடையச் செய்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் சீன மக்களின் ஆவலான கனவையும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட அதிகமான முயற்சிகளையும் நான் நன்கு புரிந்து கொள்கிறேன். இவ்வொலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தலைசிறந்ததாகவும், வெற்றிகரமாகவும் அமையும். உலகில் மிகச் சிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக இது அமையும் என்று நான் நம்புகிறேன். நான் பெய்ஜிங்கில் தற்போது காண்பவை எல்லாம், 7 ஆண்டுகளுக்கு முன்பிருந்த எனது எதிர்பார்ப்பிற்கு முழுமையாக பொருந்துகின்றன என்றார் அவர்.

A: தவிர, ஒலிம்பிக் காலத்தில், உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 4 இலட்சம் பயணிகள் பெய்ஜிங்குக்கு வந்து பயணம் செய்வர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகில் மிகப் பெரிய செல்வாக்கு வாய்ந்த விளையாட்டுப் போட்டியாக மாறுவதை இவை எல்லாம் கோடிட்டுக்காட்டுகின்றன.

B: பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பொறுத்த வரை, தீபமேற்றுதல், முக்கியத்துவம் வாய்ந்தது. தீபத்தை ஏற்றுவதுடன், ஒலிம்பிக் எழுச்சி, உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் இடங்களின் மக்களை ஒன்றுப்படுத்துகிறது என்பதை அது உலகிடம் கூறுகிறது.

A: 5 வளையங்கள் ஒளிர்விட, ஒலிம்பிக் தீபம் எரிகிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கியுள்ளது. வருகின்ற 16 நாட்களில், 5 கண்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பெய்ஜிங்கில், தலைசிறந்த சாதனைகளைப் பயன்படுத்தி, மேலும் விரைவாகவும் உயர்வாகவும் வலிமையாகவும் இருப்பது என்ற ஒலிம்பிக் எழுச்சியை வெளிப்படுத்துவர். அவர்கள், நடைமுறை நடவடிக்கைகளைப் பயன்படுத்தி, வெற்றியை விட, பங்கேற்பே முக்கியம் என்ற எழுச்சிக் கருத்தை வெளிக்காட்டுவர்.

B: வானில் பறந்த 5 வளையங்களைக் கொண்ட கொடியில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் புதிய சாதனைகளைப் பெற்று, அமைதி, நட்புறவு, முன்னேற்றம் என்ற புதிய பக்கத்தை எழுதும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.


1 2 3